Monday 26 December 2016

ஓய்வூதிய உத்திரவுகளும்...
ஓயாத குழப்பங்களும்..

     ஓய்வூதியம்  பற்றிய   7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்திட   DPE   04/08/2016 அன்று உத்திரவிட்டிருந்தது.  
DPE  உத்திரவினை    DOT  22/08/2016 அன்று   தனது கட்டுப்பாட்டில் உள்ள BSNL, MTNL உட்பட  அனைத்து தொலைத்தொடர்பு 
நிறுவனங்களுக்கும்  வழிமொழிந்து   அனுப்பியிருந்தது.

அதனை BSNL 21/12/2016 அன்று வழிமொழிந்து அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ளது.   DPE உத்திரவை DOTயும், BSNLம் ஆமென்  என்று வழிமொழிந்தன  தவிர அதில் குறிப்பாக எந்த செய்திகளும்  சொல்லப்படவில்லை. எனவே  இந்த  உத்திரவு 
BSNL  ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டது. 

22/08/2016 அன்று டெல்லியில் 7வது ஊதியக்குழு முடிவுகளை அமுலாக்குவது பற்றி  கூடுதல் CGA தலைமையில் வங்கிப்பிரதிநிதிகளுடன்  கலந்தாய்வு நடைபெற்றது. 
அதில் 11 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதில் 04/08/2016 தேதியிட்ட DPE உத்திரவு யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த DP&PW இயக்குநர்  IDA ஓய்வூதியம் பெறும்  
BSNL மற்றும் MTNLக்கு  மேற்கண்ட உத்திரவு பொருந்தாது என விளக்கமளித்துள்ளார்.  எனவே   இது BSNL ஊழியர்களுக்குப் பொருந்துமா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது. 

வங்கிகளுக்கு விளக்கம் சொல்லப்பட்ட  22/08/2016 அன்றுதான் 
DOT மேற்கண்ட உத்திரவை எந்தவித மேற்கோளும் இன்றி வழிமொழிந்துள்ளது. அதனையே BSNLம் 21/12/2016 அன்று செய்துள்ளது. எனவே 22/08/2016 அன்று அளிக்கப்பட்ட விளக்கம் செல்லத்தக்கதல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  மேலும் BSNL உருவாக்கத்தின் போது பல்வேறு விளக்கங்கள் ஓய்வூதியம் பற்றி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்...   குறிப்பாக தனியாக சொல்லப்படாத வரையில்
  அனைத்து ஓய்வூதிய உத்திரவுகளும் BSNLக்குப் பொருந்தும் என்றொரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்    ஓய்வூதிய  உத்திரவுகளுக்கு விளக்கம் கேட்டே இழுத்தடிக்கப்படுவது 
என்பது  நமது பகுதியில்  வாடிக்கையாகும். 

எனவே BSNL வழிமொழிந்துள்ள 21/12/2016 உத்திரவு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் கவலையும் எழுந்துள்ளது.
     04/08/2016 தேதிய DPE உத்திரவு BSNLலில்  அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல்...  78.2 போன்றதொரு  நீண்ட நெடிய  போராட்டம் தவிர்க்க இயலாதது.  நமது DOT CELL என்ன செய்யப்போகிறது? என்பதைப் பொறுத்தே
 நமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

No comments:

Post a Comment