Saturday, 31 December 2016

காலம் கற்றுத்தரும்...

கடிகாரத்தைப்பார்...
ஓடுவது முள்ளல்ல... உன் வாழ்க்கை... 
என்றார் சுவாமி விவேகாநந்தர்...
"சென்றது இனி மீளாது" என்றான் பாரதி...

அந்தக்காலத்தின் ஓர் அங்கம்தான் 2016...
365 நாட்களைத் தந்து விட்டு....
2016... காலம் என்ற பெயரில் கரைந்து விட்டது...

2016 கற்றுத்தந்தது... ஏராளம்...
சிறுமை கண்டு பொங்கிடச் சொன்னது...
சினம் கொண்டு எதிர்த்திடச் சொன்னது...
வலிகளைத் தாங்கச் சொன்னது...
வழிகளைத் தேடச்சொன்னது...
கண்களைத் திறந்து விட்டது... 
காதுகளை மூடிவிட்டது...
கால்களை இடற வைத்தது...
தோள்களை இளைப்பாற வைத்தது..

காலமே எல்லாக் காரியங்களையும் முடிக்கிறது...
என்கிறது உபநிடதம்...
காலம் காரியங்களை முடிக்கும்...
காலம் கற்றுத்தரும்... எனக்கும்... நமக்கும்...

No comments:

Post a Comment