Tuesday 13 December 2016

வேலை நிறுத்தம் FNTO பங்கேற்பு 

BSNL நிறுவனத்தின்  செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் துவக்குவதற்கு முடிவு செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து டிசம்பர் 15 அன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ள 
வேலை நிறுத்தத்தில் FNTO சங்கம் பங்கு பெறுகிறது. 

இதற்கான வேலை நிறுத்த அறிவிப்பை FNTO சங்கத்தின் தலைமையில் 
9 சங்கங்கள்  அங்கம் வகிக்கும் BSNL UNIONS AND ASSOCIATIONS அமைப்பு இன்று 13/12/2016 BSNL நிர்வாகத்திடம் அளித்துள்ளது.

FNTO தலைமையில் உள்ள அமைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றி பெறச்செய்யும்.

FNTO சங்கத்தை நேரில் அணுகி  போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு அழைப்பு விடுத்த BSNLEU பொதுச்செயலர் 
தோழர்.அபிமன்யு அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment