Friday 2 December 2016

மேலும் முன்னேறுவோம்...

காரைக்குடி மாவட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை நாளும் பொழுதும் குறைந்து வருகிறது. எனவே வளர்ச்சிப்பணிகளில் தேக்கநிலை நிலவுகிறது. வளர்ச்சிப்பணிகளோடு... 
ஊழியர் பிரச்சினைகளும் தேங்கிக்கிடக்கின்றன. 

எனவே காரைக்குடி BSNLEU மற்றும் NFTE மாவட்டச்செயலர்கள் 
திருச்சிப் பொதுமேலாளரை 02/12/2016 அன்று   சந்தித்து வளர்ச்சிப்பணிகள் குறித்தும்...  ஊழியர் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.  

நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையே 
புரிதல் மற்றும் இணக்கமான சூழல் நிலவுதல் ஆகியவை
 நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும்   
என்ற கருத்தை பொதுமேலாளர் முன்வைத்தார். 

மேலும்  ஊழியர் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நிர்வாகத்தின் கடமை என்றும்...  இன்றைய சூழலில்... தொழிற்சங்கங்கள்  ஊழியர் பிரச்சினைகளில் மட்டுமின்றி   நிறுவனத்தின் வளர்ச்சியிலும் தங்களது ஆக்கபூர்வமான  பங்களிப்பைக் கூடுதலாக செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும்... தெளிவுற எடுத்துரைத்தார். 

 பொதுமேலாளர் முன் வைத்த கருத்துக்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடைய கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை. எனவே  வளர்ச்சிப்பணிகளில் ஊழியர்களின்  பங்களிப்பை மேலும் கூடுதலாகச் செலுத்துவோம்  என    இரண்டு மாவட்ட சங்கங்களின் சார்பாகவும் உறுதிபட எடுத்துரைக்கப்பட்டது.

தனது உடல் நலம் சீரற்ற நிலையிலும்.. 
ஊழியர் சங்கப்பிரதிநிதிகளை சந்தித்து...
தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய 
திருச்சி பொதுமேலாளருக்கு நமது நன்றிகள்...

பல மாவட்டங்களில்...
சக தொழிற்சங்கங்களுக்கிடையே 
இணக்கமில்லாத சூழலில்...
நம்மோடு  முழு மனதாய் இணைந்து 
நிர்வாகத்தை சந்தித்து ஊழியர் பிரச்சினைகளையும்... 
மாவட்ட சூழலையும் பற்றி ஆக்கப்பூர்வமாய் விவாதித்த 
BSNLEU  மாவட்டச்செயலருக்கும் நமது நன்றிகள்...

No comments:

Post a Comment