Tuesday 27 December 2016

அதிகாரிகள் சங்கங்களும்.. 
அங்கீகாரச் சலுகைகளும்...

BSNLலில் 45.32 சத வாக்குகள் பெற்ற 
SNEA சங்கம் முதன்மைச்சங்கமாகவும் 
41.52 சத வாக்குகள் பெற்ற 
AIBSNLEA  சங்கம் SUPPORT ASSOCIATION 
என்ற நிலையிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
இரண்டு சங்கங்களுக்கும் இடையே 
3.8 சத வாக்குகளே வித்தியாசம். 

அதிகாரிகள் சங்க அங்கீகார விதிகளின் படி 35 சதத்திற்கும்  அதிகமாக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற சங்கம்  முதன்மைச்சங்கமாகவும்... 
15  சதத்திற்கும்  அதிகமாக வாக்குகள் பெற்ற சங்கம்
SUPPORT ASSOCIATION  என்ற அளவிலும் அங்கீகரிக்கப்படும்.

ஆனால் இரண்டு சங்கங்கள் 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால் அங்கீகார நிலை என்ன என்பது பற்றி அங்கீகார விதிகளில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் 41.52 சத வாக்குகள் பெற்று  SUPPORT ASSOCIATION  என்ற தகுதியைப் பெற்றுள்ள 
AIBSNLEA  சங்கம் தங்களுக்கு ஊழியர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது போல் சமநிலை கோரி போராட்டக்களம் இறங்கியுள்ளது.

தற்போது ஊழியர் சங்கங்களில் இரண்டு அங்கீகாரச் சங்கங்கள் இருப்பது போல அதிகாரிகள் மட்டத்திலும் 35 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.  41.52 சத வாக்குகள் பெற்ற ஒரு சங்கம் கொள்கைப்பிரச்சினைகளில் தலையிட முடியாது... அதிகாரப்பூர்வ  பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் விதிகள் உருவாக்கப்படுவது கேலிக்குரியது. எனவே AIBSNLEA  சங்கம் தொடங்கியுள்ள போராட்டம் நியாயமான போராட்டமாகும். நிர்வாகம் ஏறத்தாழ 42 சதம் வாக்குகள் பெற்ற சங்கத்திற்கு உரிய தகுதி அளிக்க வேண்டும்.

அதிகாரிகள் சங்கங்கள் நம்மைச் சுட்டிக்காட்டும் வேளையில்...
நாமும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்..

அதிகாரிகள் சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளில்...

  • INTRANET எனப்படும் நிறுவன இணையத்தளத்திற்கு உபயோகிப்பாளர் வசதி தரப்பட்டுள்ளது. (USER ID FOR INTRANET)
  • அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பொறுப்பாளர்களுக்கு அனைத்து  நிலைகளிலும்  இலவச அலைபேசி வசதி தரப்பட்டுள்ளது.  

 மேற்கண்ட இரண்டு சலுகைகளும் ஊழியர் சங்கங்களுக்கு கிடையாது. இந்த பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.  எனவே நிர்வாகம் மேற்கண்ட சலுகைகளை  அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நமது சங்கங்களின் சார்பாக 
நாம் கோரிக்கையை விரைந்து எழுப்ப வேண்டும்.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பது 
ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல...
இணையான அங்கீகாரம் என்ற 
ஜனநாயகப் போராட்டக் களம் காணும் 
AIBSNLEA  சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment