Tuesday, 30 October 2018

தமிழ் போல் தழைத்து வாழ்க…
 
இன்று பணிநிறைவு பெறும்

காரைக்குடி NFTE GM அலுவலக 
கிளைத்தலைவர் அன்புத்தோழியர் 
TS.தமிழரசி
அலுவலகக் கண்காணிப்பாளர்
அவர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.
 -----------------------------------------------------------------------------
பணிநிறைவு விழா
மனமகிழ் மன்றத்தின் சார்பாக
இன்று 31/10/2018 மாலை GM அலுவலகம் காரைக்குடி
 ------------------------------------------------------------------------------
சங்கத்தின் சார்பாக
10/11/2018 – சனிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
பங்கேற்பு
தோழர்.நடராஜன் – மாநிலச்செயலர் NFTE
-----------------------------------------------------------------------------
வாழ்த்து சொல்ல 7598775978

பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/10/2018
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்

காரைக்குடி GM அலுவலகக் கிளைத்தலைவர்
அன்புத்தோழியர்
TS.தமிழரசி OS

அமைதியின் ஊற்று திருமதி
P.ஜாய் ஹன்னா புஷ்பம் SDE

கடமையில் கருத்தான 
தோழர் T.வின்சென்ட்நாதன் TT 
காளையார்கோவில்

ஆகிய தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடனும்… செம்மையுடனும்
விளங்கிட வாழ்த்துகின்றோம்.

Monday, 29 October 2018


செந்தொண்டர் சக்திவேல்… 

ஜீவா அவர்களின் உற்ற தோழர்…
ஜெகன் அவர்களின் உரிமைமிகு தோழர்…
தோழர். தா.பா அவர்களின் இளமைக்கால தோழர்…
தோழர் அய்யர் அவர்களின் அனுக்கத்தோழர்…
பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்…

காலுக்கு செருப்பில்லாத…
கால் வயிற்றுக்கு கஞ்சியில்லாத ஜீவன்களுக்காக..
காரைக்குடியில் ஜீவா நகர் உருவாக்கியவர்…

காரைக்குடி பகுதியில் களம் பல கண்டவர்….
காரைக்குடி நகரின் மிகச்சிறந்த தையல் கலைஞர்…
தொலைத்தொடர்பு தோழர்களோடு தோழமை மிக்கவர்…
மக்களுக்கான கலை இலக்கியத்தில் தடம் பதித்தவர்…

வெண்ணிற ஆடை வெண்திரை சினிமாவிற்காக…
அன்றைய AVM நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டு…
மனைவியின் உடல்நலக்குறைவால் அந்த வாய்ப்பை துறந்தவர்…

BSNL என்னும் அரசு நிறுவன சேவையை மட்டுமே…
பெருமையோடு காலம் முழுக்கப் பயன்படுத்தியவர்…

எங்களின் உற்ற வழிகாட்டி…
தோழமையின் அடையாளம்…
இளைஞர்களுக்கு எழுச்சி தந்தவர்…
அனுபவத்தின் அடையாளம்…

அருமைத்தோழர். சக்திவேல் அவர்கள்
வயது மூப்பின் காரணமாக
29/10/2018 அன்று இயற்கை எய்தினார்…

அவரது மறைவிற்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...
அவரது வழியில் அயராது நடைபோடுவோம்...

Saturday, 27 October 2018


நவம்பர் விழா
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி.

 மாவட்டச்செயற்குழு
GM அலுவலகம் மற்றும் புறநகர்க்கிளை மாநாடு
தோழியர். தமிழரசி பணிநிறைவு பாராட்டு விழா

10/11/2018 – சனிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

 பங்கேற்பு : தோழர்கள்
 K.நடராஜன்
மாநிலச்செயலர் – NFTE

G.சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலர்  - NFTE

PL.இராமச்சந்திரன்
மாநில துணைப்பொதுச்செயலர் – AITUC

மற்றும் தலைவர்களும்… தோழர்களும்… 
தோழர்களே… வாரீர்….

சமத்துவம் – தன்மானம் -பாதுகாப்பு 
சுகாதாரம் – நல்வாழ்வு 

 AIWWF - AITUC
அனைத்திந்திய உழைக்கும் பெண்கள் சம்மேளனம்
அகில இந்தியக் கருத்தரங்கம்

அக்டோபர் 27 28 29 – இராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை.

 பங்கேற்பு  : தோழியர்கள்
 அமர்ஜித் கெளர் AITUC
DR.வசந்தி தேவி
DR.சாந்தி - AIWWF 
கனிமொழி MP
குஷ்பு AICC
ஆன்னி ராஜா NFIW
டாக்மேர் வால்டேர் ILO
இரமா பிரியா - LAWYER
DR.விஜயலட்சுமி - AIWWF
வஹிதா நிஜாம் – AIWWF
ANDA ANASTHASAKI WFTU
TEESTA SETALVAD – HUMAN RIGHTS

மற்றும் அறிஞர்களும்… தலைவர்களும்…

மத்திய செயற்குழு முடிவுகள்

நமது NFTE சங்க மத்திய செயற்குழுக்கூட்டம்
ஹரித்துவார் நகரில் அக்டோபர் 24 மற்றும் 25
தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன…

3வது ஊதிய மாற்றம் நவம்பர் 2018க்குள் விரைந்து அமுல்படுத்தப்பட வேண்டும். தாமதம் தொடருமானால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக ஊழியர்களை 
செயற்குழு  அறைகூவல் விடுக்கின்றது.

அதிகாரிகளுக்கு இணையான புதிய பதவி உயர்வுத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த திட்டத்தில் SC/ST ஊழியர்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு MULTI TASK பல்திறனுள்ள ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

அனைத்து இலாக்காத் தேர்வுகளும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். எதிர்மறை மதிப்பெண் முறை விலக்கப்பட வேண்டும்.

போனஸ் குழுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும். உடனடியாக 
அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

செல்கோபுரங்கள் பராமரிப்பு மற்றும் SIM விற்பனை ஆகிய பணிகளைத்
தனியாருக்குத் தாரைவார்த்துள்ள செயலை செயற்குழு கண்டிக்கின்றது. தற்போது பணியில் உள்ள ஊழியர்களே திறம்பட செல்கோபுரங்களைப் பராமரிக்க முடியும். எனவே OUTSOURCING என்னும் தனியார் நுழைவு நிறுத்தப்பட வேண்டும்.

SR.ACCOUNTANT பதவிகள் உடனடியாக GROUP ‘B’
அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்தப் படவேண்டும்.  
இந்த நீண்ட நாள் பிரச்சினை மேலும் தாமதப்படுத்தப்படக்கூடாது.

இலாக்காத்தேர்வெழுதும் ஊழியர்களுக்கு உயர் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்துள்ள நிலை மாற்றப்பட வேண்டும். அவர்களது அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவர்களது 
கல்வித்தகுதி தளர்த்தப்பட வேண்டும்.

BSNLன் நிதிநிலையைக் கணக்கில் கொண்டு
ஊதாரிச் செலவினங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

நீண்ட நாட்களாகப் பட்டுவாடா செய்யப்படாத மருத்துவபில்கள் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் இன்னும் TSM என்ற தற்காலிக நிலையில் பணிபுரியும் தோழர்கள் உடனடியாக நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

சிற்சில மாநிலங்களில் TERM INSURANCE SCHEME என்ற ஆயுள் காப்பீடு அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும்.

RTP சேவைக்காலம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்காலமாக கருதப்பட வேண்டும்.

BSNLலில் நிரந்தரம் செய்யப்பட்ட நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப்பலன்களுக்காக வழங்கப்படும்  ஓய்வூதியப் பங்களிப்பு கூடுதலாக  உயர்த்தப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து  சலுகைகளும் உரிமைகளும் தவறாமல் அளிக்கப்பட வேண்டும். அவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் உரிய தேதிக்கு முன் வழங்கப்பட வேண்டும்.

Wednesday, 24 October 2018

மத்திய செயற்குழுக்கூட்டம்

நமது NFTE சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம்
ஹரித்துவார் நகரில் 24 மற்றும் 25 தேதிகளில்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

தேசியக்கொடியைத் தோழர்.இஸ்லாம் அகமது அவர்களும்,
சங்கக்கொடியைத் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும் 
ற்றிவைத்து செயற்குழுவைத் துவக்கி வைத்தனர். 
TEPU பொதுச்செயலர் தோழர்.சுப்புராமன் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் இருந்து
அகில இந்திய சம்மேளனச்செயலர் தோழர்.காமராஜ்,
துணைத்தலைவர் தோழர்.பழனியப்பன்,
சிறப்பு அழைப்பாளர் தோழர்.செம்மல் அமுதம்,
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்,
உதவிச்செயலர் தோழர்.முரளிதரன்,
மாநிலப்பொருளர் சுப்பராயன் உள்ளிட்ட
தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று செயற்குழு நிறைவடைகின்றது.
பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு
சீரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Monday, 22 October 2018

BSNL  ACTIVE   FESTIVAL   SEASON
ஊக்கமது கைவிடேல்...


BSNLன் தரமிகு சேவையை…
மக்களிடம் மேலும் கொண்டு செல்லவும்…
நமது விற்பனையை அதிகரிக்கவும்,
வருமானத்தை உயர்த்திடவும்…
வாடிக்கையாளர்களை வசப்படுத்தவும்…

18/10/2018 தசரா முதல் 07/11/2018 
தீபாவளி வரையிலான திருவிழாக்காலத்தில்
உற்சாகமுடன் ஊக்கமுடன் ஓய்வின்றி உழைத்திட
அனைத்து BSNL அதிகாரிகளும் ஊழியர்களும்
CORPORATE அலுவலகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும்
18/10/2018 முதல் 07/11/2018 வரை
கதவுகள் மூடாது கனிவோடு
வாடிக்கையாளருக்காக காத்திருக்க வேண்டும்.

நமது விற்பனையாளர்களை அவர்கள்
விற்பனை செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று
வாழ்த்துகளைக் கூறிட வேண்டும்.

விற்பனையில் சிறந்த  விற்பன்னர்களுக்கு
நற்சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

ஊரெங்கும் விழாக்கோலம் பூண்டு
ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்கள்
பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து நிகழ்வுகளும் படங்களாக செய்திகளாக
தலைமையிடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஊடகங்களில் உற்சாகமோடு செய்திகள் வருவதற்கு
வழிவகை செய்திட வேண்டும்.

நமது BSNLன் வளர்ச்சிக்கான இந்த செயல்திட்டத்தில்
நமது தோழர்கள் முனைப்போடு செயலாற்ற வேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களை சிரமேற்கொண்டு
தசரா அன்று அசராது பணிபுரிந்த
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..

மேலும் கூடுதல் உற்சாகமுடன்
நமது தோழர்கள் தங்களது பங்களிப்பைச் செய்திடவேண்டும்.
முனுமுனுப்போடு செயல்படுவது தவிர்த்து
முனைப்போடு செயலாற்றிட வேண்டும்…
-------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட திருவிழா செயல்திட்டத்தை  
வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு
24/10/2018 அன்று காரைக்குடியில் நடைபெறவிருந்த
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
30/10/2018 அன்று நாடுதழுவிய தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அந்தப் போராட்டத்தினை  07/11/2018க்குப் பின்பு நடத்திடுவது நமக்கும் BSNLக்கும் நலம் பயக்கும்.
எனவே அனைத்து சங்கக்கூட்டமைப்பு போராட்டத்திட்ட தேதிகளை
மறுபரிசீலனை செய்திட அன்போடு வேண்டுகின்றோம். 

Sunday, 21 October 2018


கிளைக்கூட்டம்
NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
புறநகர் மற்றும் GM அலுவலகக்கிளைகள்
காரைக்குடி
----------------------------------------------------------------------------
இணைந்த கிளைக்கூட்டம்
----------------------------------------------------------------------------
24/10/2018 – புதன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
----------------------------------------------------------------------------
 தலைமை : தோழியர். தமிழரசி – கிளைத்தலைவர்
----------------------------------------------------------------------------
 ஆய்படு பொருள் 

அகில இந்திய உழைக்கும் பெண்கள் மாநாடு பங்கேற்பு
புறநகர் மற்றும் GM அலுவலக கிளை மாநாடுகள்
பணிநிறைவு பாராட்டு விழா
தலமட்டப்பிரச்சினைகள்..
மற்றும் ஏனைய பிரச்சினைகள்

தோழர்களே…. வாரீர்…

அன்புடன் அழைக்கும்
லெ.கார்த்திகா - GM அலுவலக கிளைச்செயலர்
ம.ஆரோக்கியதாஸ் - புறநகர் கிளைச்செயலர்

Tuesday, 16 October 2018


என் சோகக்கதையைக் கேளு…

என் பெயர் R.சுதா
அலுவலகக் கண்காணிப்பாளர் – காரைக்குடி
இப்போது நம்ம பெயருக்கு மட்டும்
ஒன்னும் குறைச்சல் இல்லை….

நான் RTP என்னும் அன்றாடக்கூலியாய் பணிக்குள் அமர்ந்து
11/08/1986ல் தொலைபேசி இயக்குநராய்ப் பணி நிரந்தரம் பெற்றேன்.

தோழர்.குப்தா காலத்தில் SR.TOA பதவி உயர்வு வந்தது…
மொத்த சேவையையும் சேர்த்து முதற்கட்டப்பதவி உயர்வும் வந்தது…
11/08/2002ல் 7100-200-10100 சம்பளவிகிதத்தில் OTBP கிட்டியது.

அதன் பின் நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது…
அப்போதுதான் எனக்கு சோதனை துவங்கியது…

01/10/2004ல் நாலுகட்டப்பதவி உயர்வு பெற்ற
என்னை விட சேவையில் இளையோர்களுக்கு
சம்பளம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது…

எனவே சிலரது ஆலோசனையின்படி
01/10/2004 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு
பெற விருப்பம் தெரிவித்தேன்…
அங்கேதான் என் சோகம் ஆரம்பமானது…

7100-200-10100 சம்பளவிகிதத்தில் இருந்த நான்
நாலுகட்டப்பதவி உயர்வு என்னும்
பரமபத விளையாட்டில் 6550-185-9325 என்னும்
சம்பளவிகிதத்திற்கு கீழே தள்ளப்பட்டேன்….

உலகிலேயே பதவி உயர்வு பெற்று…
கீழே உள்ள சம்பளத்திற்கு தள்ளப்பட்ட
கொடுமை இங்கு மட்டுமே நிகழ்ந்தது…
எழுத்தர்… இயக்குநர் என்றால்தான் கேட்பார் யாருமில்லையே…

01/10/2011ல் அடுத்த நாலுகட்டப்பதவி  உயர்வு கிட்டியது…
7100-200-10100 சம்பளத்திற்கு இணையான
ரூ.13600-25420 சம்பள விகிதத்தில் சம்பளம் பொருத்தப்பட்டது..

அதாவது 11/08/2002ல்
நான் பெற்ற 7100-200-10100 சம்பளத்தை
01/10/2004ல் இழந்து… மீண்டும்
01/10/2011 அன்று மதுரையை மீட்ட சுதாவாக அடைந்தேன்…

இனிமேல்தான் ஒரிஜினல் சோகம் உருவானது…
01/01/2015ல் ரூ.25040/= அடிப்படைச்சம்பளம் அடைந்து
01/01/2016ல் வெறும் ரூ.380/= ஆண்டு உயர்வுத்தொகை பெற்று
ரூ.25420/- உச்சநிலை சம்பளம் பெற்று தேக்கநிலையை அடைந்தேன்…
01/01/2017ம் ஆண்டு தவறேதும் செய்யாமல்…
தேக்கநிலையால் ஆண்டு உயர்வுத்தொகை இழந்தேன்…

மூன்றாவது ஊதிய மாற்றம் 01/01/2017 முதல்
அமுல்படுத்தப்பட்டால் தேக்கநிலை சற்று தளரும்…
ஆனால் 2016ல் ஆண்டு உயர்வுத்தொகை முழுமையாக அடையாததால்
மூன்றாவது ஊதியமாற்றத்தில் முழுமையாக
ரூ.1000/= அடிப்படைச்சம்பளத்தில் குறையும்…
என் ஆயுள் முழுக்க இதன் பாதிப்பு தொடரும்…

என் போன்றவர்கள் செய்த தவறென்ன?
7100-200-10100 சம்பளத்தில் OTBP பெற்றது தவறா?

01/10/2004 முதல்…
நாலுகட்டப்பதவி உயர்விற்கு விருப்பம் தந்தது தவறா?

என்னைப்போன்றவர்கள் நாடுமுழுக்க ஆயிரம் பேர் உண்டு…
ஆனால் ஒவ்வொருவரும் செய்வதறியாது விழிக்கின்றனர்….

உயர்ந்த பட்ச சம்பளத்தில் இருந்தோரை…
பதவி உயர்வு என்ற பெயர் சொல்லி
கீழ்மட்ட சம்பளத்திற்கு கொண்டு வந்ததென்ன நியாயம்?

என் போன்றோருக்கு நேர்ந்த அநியாயத்தை
அகற்ற வேண்டியது இலாக்காவின் பணியல்லவா?

எண்ணற்ற தோழர்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதியைக் களைய வேண்டியது சங்கத்தின் கடமையல்லவா?

உழைக்கும் பெண்கள் மாநாடு

AIWWF - AITUC
அனைத்திந்திய உழைக்கும் 
பெண்கள் சம்மேளனம்

அகில இந்திய உழைக்கும் பெண்கள்
தேசியக்கருத்தரங்கம்
 -------------------------------------------------------------------
2018 அக்டோபர் 27…28…29…. 
இராஜா அண்ணாமலை மன்றம்  
சென்னை
 -------------------------------------------------------------------
பங்கேற்பு
தோழியர்.அமர்ஜித் கெளர்
பொதுச்செயலர் – AITUC
மற்றும் தலைவர்கள்….

தோழியர்களே… அணி திரள்வீர்…

Monday, 15 October 2018


முதல் கல்… 

BSNL சொசைட்டியின் ராங் கால்..
என்ற தலைப்பிட்டு தமிழகம் முழுவதும்
முகநூல் மற்றும் Wattsappல்
பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைக்கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான
வெள்ளனூர் நிலம் விற்கப்பட்டு விட்டது…
பலகோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது…
கூட்டுறவு சங்க அப்பாவி உறுப்பினர்களுக்கு
சொந்தமான சொத்து சூறையாடப்படுகிறது  
என அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியைப் படித்ததில்
நமக்கு ஒன்றும்
ஆச்சரியமோ… அதிர்ச்சியோ இல்லை…
சென்னைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் என்பது
காலம் காலமாக நடக்கும் நிகழ்வுதான்…
இப்போது எல்லையற்றுப் போய்க்கொண்டிருக்கிறது….
அவ்வளவுதான்…

ஊழல் புரிபவர்கள்…
பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்…
இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள்
சிக்கி சின்னாபின்னமாகிப்போவார்கள்… என்பது நிச்சயம்…

கூட்டுறவு சங்கப் பிரச்சினையில்
நமக்கு எழுவது ஒரே ஒரு கேள்விதான்…
நமது BSNL நிறுவனத்தில்…
தமிழகத்தில்….
அகில இந்திய அளவில்…
சென்னைக்கூட்டுறவு சங்கத்திடம்…
கையேந்தாத சங்கம் உண்டா?
கையேந்தாத அமைப்பு உண்டா?
கையேந்தாத தலைவர்கள் உண்டா?
சுரண்டி சுகம் காணாதவர்கள் எவரேனும் உண்டா?

பைபிளில் கூறப்பட்டுள்ளது போல…
அப்படி யாரேனும் ஒருவர் இருந்தால்…
அவர்கள் முதல் கல்லை எறியட்டும்…

Wednesday, 10 October 2018


நம்பிக்கையே நமது மூலதனம்
மூன்றாவது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடந்த
ஏழாவது கூட்டம் சற்று ஏழரையாகவே முடிந்துள்ளது.

தேக்கநிலையைத் தவிர்க்க...
NE 4 மற்றும் NE 5 ஊதியவிகிதங்களின் MAXIMUM உச்சபட்சத்தை 
சற்றுக்கூடுதலாக்க வேண்டும் என்ற
ஊழியர் தரப்பு கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே 10/09/2018 அன்று நிர்வாகம் முன்மொழிந்த
சம்பளவிகிதங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தம் நிலவியதால் நிர்வாகத்தின் முன்மொழிவை
ஊழியர் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

சம்பள விகிதம் முடிவுக்கு வந்து விட்டது.
அடுத்த நமது இலக்கு ALLOWANCE என்னும் படிகள் மாற்றம்தான்…
படிகளில் முக்கிய இடம் வகிப்பது வீட்டு வாடகைப்படியாகும்.

6வது சம்பளக்குழுவால் 
30,20,10 சதம் என உயர்த்தப்பட்ட வீட்டுவாடகைப்படி
ஏழாவது சம்பளக்குழுவால்... 
24,16,8 சதம் எனக் குறைக்கப்பட்டது.

A பிரிவு நகரங்களில் 30 சதமாக இருந்த வீட்டு வாடகைப்படி
தற்போது 24 சதம் என 6 சதம் குறைக்கப்பட்டாலும் கூட
புதிய ஊதிய விகிதத்தில் கணிசமான உயர்வைப் பெற்றுத்தந்துள்ளது.

A பிரிவு நகரங்களில்… தற்போது
ரூ.7760/= அடிப்படைச்சம்பளம் பெறும் ஊழியருக்கு
30 சத அடிப்படையில் 
ரூ.2328/= வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படுகின்றது.

தற்போதுள்ள ரூ.7760/= அடிப்படைச்சம்பளம்
ரூ.19000/= என புதிய சம்பளமாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
அப்படியானால் 24 சத அடிப்படையில் வீட்டுவாடகைப்படி
ரூ.4560/= வழங்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள வீட்டுவாடகைப்படியை விட
ரூ.2232/= கூடுதலாகக் கிடைக்கும்.
A பிரிவு மட்டுமல்ல அனைத்துப் பிரிவு நகரங்களிலுமே 
வீட்டு வாடகைப்படி கூடுதலாகவே கிடைக்கும்.

துவக்க நிலை ஊதியமான ரூ.19000/= பெறும்
அடிமட்ட ஊழியருக்கே வீட்டுவாடகைப்படி
மாதம் ரூ.2232/= உயருமானால்…
மற்ற ஊதிய நிலைகளைப் பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.

எனவேதான் நிர்வாகம் வீட்டுவாடகையை
புதிய ஊதிய விகிதத்தில் தர மறுப்பு தெரிவித்துள்ளது.
இதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காலம் காலமாக ஊழியர்கள் வீட்டுவாடகைப்படி
விவகாரத்தில் ஏமாற்றப்படுவது இயற்கையாக நிகழும் ஒன்று.
வீட்டு வாடகைப்படி என்பது ஊழியர் ஒருவர்
ஓய்வு பெறும்போது அவரோடு சேர்ந்து ஓய்வு பெற்றுவிடும்.
ஆனாலும் கூட நிர்வாகம் கண்மூடித்தனமாக இதை மறுத்துள்ளது.
ஊழியர் தரப்பும் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளது.

புதிய ஊதிய விகிதங்களில் ஏற்பட்ட
அமைதியான உடன்பாடு போலல்லாமல்
வீட்டுவாடகைப்படி விவகாரம் சற்று விவகாரமாகவே முடியும்.
ஆனாலும் நாம் நமது குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
நமது ஒற்றுமையான போராட்டங்கள் மூலமே
புதிய ஊதியத்தில் வீட்டுவாடகையை வென்றிட முடியும்.
நம்பிக்கையும்… போராட்டமுமே நமது மூலதனம்….