Saturday, 27 October 2018


மத்திய செயற்குழு முடிவுகள்

நமது NFTE சங்க மத்திய செயற்குழுக்கூட்டம்
ஹரித்துவார் நகரில் அக்டோபர் 24 மற்றும் 25
தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன…

3வது ஊதிய மாற்றம் நவம்பர் 2018க்குள் விரைந்து அமுல்படுத்தப்பட வேண்டும். தாமதம் தொடருமானால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக ஊழியர்களை 
செயற்குழு  அறைகூவல் விடுக்கின்றது.

அதிகாரிகளுக்கு இணையான புதிய பதவி உயர்வுத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த திட்டத்தில் SC/ST ஊழியர்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு MULTI TASK பல்திறனுள்ள ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

அனைத்து இலாக்காத் தேர்வுகளும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். எதிர்மறை மதிப்பெண் முறை விலக்கப்பட வேண்டும்.

போனஸ் குழுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும். உடனடியாக 
அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

செல்கோபுரங்கள் பராமரிப்பு மற்றும் SIM விற்பனை ஆகிய பணிகளைத்
தனியாருக்குத் தாரைவார்த்துள்ள செயலை செயற்குழு கண்டிக்கின்றது. தற்போது பணியில் உள்ள ஊழியர்களே திறம்பட செல்கோபுரங்களைப் பராமரிக்க முடியும். எனவே OUTSOURCING என்னும் தனியார் நுழைவு நிறுத்தப்பட வேண்டும்.

SR.ACCOUNTANT பதவிகள் உடனடியாக GROUP ‘B’
அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்தப் படவேண்டும்.  
இந்த நீண்ட நாள் பிரச்சினை மேலும் தாமதப்படுத்தப்படக்கூடாது.

இலாக்காத்தேர்வெழுதும் ஊழியர்களுக்கு உயர் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்துள்ள நிலை மாற்றப்பட வேண்டும். அவர்களது அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவர்களது 
கல்வித்தகுதி தளர்த்தப்பட வேண்டும்.

BSNLன் நிதிநிலையைக் கணக்கில் கொண்டு
ஊதாரிச் செலவினங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

நீண்ட நாட்களாகப் பட்டுவாடா செய்யப்படாத மருத்துவபில்கள் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் இன்னும் TSM என்ற தற்காலிக நிலையில் பணிபுரியும் தோழர்கள் உடனடியாக நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

சிற்சில மாநிலங்களில் TERM INSURANCE SCHEME என்ற ஆயுள் காப்பீடு அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும்.

RTP சேவைக்காலம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்காலமாக கருதப்பட வேண்டும்.

BSNLலில் நிரந்தரம் செய்யப்பட்ட நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப்பலன்களுக்காக வழங்கப்படும்  ஓய்வூதியப் பங்களிப்பு கூடுதலாக  உயர்த்தப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து  சலுகைகளும் உரிமைகளும் தவறாமல் அளிக்கப்பட வேண்டும். அவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் உரிய தேதிக்கு முன் வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment