09/01/2021 அன்று காரைக்குடியில் NFTE காரைக்குடி மாவட்டச்சங்க செயற்குழு மாவட்டத்தலைவர் தோழர் லால்பகதூர் அவர்கள் தலைமையில் பணியில் உள்ள தோழர்கள் கலந்து கொண்ட செயற்குழுவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
AITUC தலைவர்
தோழர் பழ.இராமச்சந்திரன், AIBSNLPWA மாவட்டச்செயலர் தோழர் நாகேஸ்வரன், மாவட்டத்தலைவர்
தோழர் முருகன், NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர். சுபேதார் அலிகான், ஒப்பந்த ஊழியர்கள்
சங்க மாவட்டச்செயலர் தோழர் முருகன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட
முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒப்பந்த ஊழியர்
அமைப்பு
ஒப்பந்த ஊழியர்கள்
சங்கம் TMTCLU பதாகையின்கீழ் AITUCயுடன் இணைந்த
அமைப்பாகச் செயல்படும். AITUC தலைவர்களின் பங்களிப்போடு விரைவில் சிறப்பு மாநாடு நடத்தப்படும்.
ஒப்பந்த ஊழியர்கள்
சங்க மாவட்டத்தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய தோழர் முருகன் மறைவு ஒப்பந்த ஊழியர் இயக்கத்திற்கு
பெரும் இழப்பு ஆகும். ஒப்பந்த ஊழியர் சங்க
மாவட்டத்தலைவராகத் தோழர். லால்பகதூர் செயல்படுவார்.
கிளை மாநாடுகள்
விருப்ப ஓய்விற்குப்
பின் ஊழியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. எனவே காரைக்குடித் தொலைத்தொடர்பு
மாவட்டத்தில் சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை மற்றும் இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை
என இரண்டு கிளைகள் மட்டும் அமைக்கப்படுகின்றன.
சிவகங்கை
வருவாய் மாவட்டக்கிளையின் கிளை அமைப்பு மாநாடு 26/01/2021 குடியரசு தினத்தன்று காரைக்குடியில்
நடைபெறும்.
இராமநாதபுரம்
வருவாய் மாவட்டக்கிளையின் கிளை அமைப்பு மாநாடு 13/02/2021 அன்று இராமநாதபுரத்தில் நடைபெறும்.
மாவட்ட மாநாடு
காரைக்குடி
மாவட்ட மாநாடு 08/03/2021 மகளிர் தினத்தன்று காரைக்குடியில் நடைபெறும்.
போராட்ட அறைகூவல்
மதுரை வணிகப்பகுதி
இணைப்பிற்குப் பின் காரைக்குடி மாவட்டம் இரண்டாம் பட்சமாக மதுரைப்பகுதி நிர்வாகத்தால்
நடத்தப்படுகின்றது. பல்வேறு ஊழியர் பிரச்சினைகள், விருப்ப ஒய்வில் சென்றவர்களின் பிரச்சினைகள்,
ஓய்வு பெற்ற ஊழியர்களின் நாள்பட்ட பிரச்சினைகள்,
ஒப்பந்த ஊழியர்களின் வேதனை தரும் பிரச்சினைகள், சென்னை, மதுரை கூட்டுறவு சங்கக்கொடுமைகள்,
சரிந்து வரும் BSNL சேவை என திரும்பும் திசையெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் தொழிலாளர்களைத்
துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன. எனவே பிரச்சினைகளை எடுத்துரைக்கவும், தீர்வு காணவும்
கீழ்க்கண்ட போராட்ட அறைகூவலை மாவட்டச்செயற்குழு விடுக்கின்றது.
30/01/2021
அண்ணல் காந்தி நினைவு நாளன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.
16/02/2021
அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா.
நிரந்தர ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்.
தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
No comments:
Post a Comment