GROUP TERM INSURANCE
குழுக்காப்பீட்டுத் திட்டம்
GROUP TERM
INSURANCE எனப்படும்
குறிப்பிட்ட காலவரையறைக்கான குழுக்காப்பீடு BSNL அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அந்த காப்பீட்டுத்திட்டம் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சங்கங்களால் கோரிக்கை
எழுப்பப்பட்டது. அதனடிப்படையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LICயுடன் பேச்சுவார்த்தை
நடைபெற்று தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. BSNL ஊழியர்கள் அனைவரிடமும் விருப்பம்
கேட்கப்பட்டு திட்டம் அமுல்படுத்தப்படும்.
Voluntary Group Term Insurance Scheme for BSNL Employees
(Non-Executive)
ஆயுள் காப்பீட்டுத்திட்டம்
தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயமில்லை.
ஆயுள் காப்பீட்டுத்தொகை
ரூ. 20 லட்சம்
கால அளவு : ஓய்வு
பெறும் வயதை அடையும் வரை
Premium தொகை
50 வயதிற்குட்பட்டவர்களுக்கு
ஆண்டிற்கு ரூ.3776/=
ஒரு மாத Premium ரூ. 315/=
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
ஆண்டிற்கு ரூ.18172/=
ஒரு மாத Premium ரூ. 1514/=
ஆண்டிற்கு ஒருமுறை சம்பளத்தில் பிடிக்கப்பட்டு
LIC நிறுவனத்திற்கு Premium தொகை செலுத்தப்படும்.
தோழர்களே...
மேற்கண்ட ஆயுள் காப்பீட்டுத்திட்டம் பணியில் இருக்கும்போது
அகால மரணம் அடையும் ஊழியர்களின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உறுதுணை செய்யும்
திட்டமாகும். குறிப்பாக BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஏதுவான திட்டமாகும்.
தற்போது BSNL ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது Group Savings Linked Insurance Scheme எனப்படும் GSLIS திட்டமாகும். ரூ.105 மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படுகின்றது. இதில் 70 சதம் ஊழியருக்குத் திருப்பித் தரப்படுகின்றது. 30 சதம் திருப்பித் தரப்படமாட்டாது. ஆயுள் காப்பீட்டுத்தொகை ஒரு லட்சம் ஆகும். இது மிகவும் குறைவான தொகையாகும். வெறும் ஒரு லட்சம் என்பது எதிர்பாராமல் இறப்பைச் சந்திக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புக்களை எந்தவிதத்திலும் சரிசெய்யாது. மேலும் விபத்தில் இறப்பைச் சந்திக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு கூடுதலாக 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகின்றது. அதிலும் விபத்தைச் சந்தித்தவர் 14 நாட்களுக்குள் மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற நிபந்தனைகள் வேறு.
எனவே தற்போதைய GSLIS திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத்திட்டத் தொகை ஒரு லட்சத்தில் இருந்து குறைந்தது 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். தற்போது கூடுதலாக அமுல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் மற்ற நடைமுறைகள் என்ன என்பது திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பே தெரியவரும். எப்படியாயினும் அகால மரணமடையும் ஊழியரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ஆயுள் காப்பீடு என்பது உறுதுணையாக இருக்கும்.
No comments:
Post a Comment