Saturday, 2 January 2021

ஒப்பந்த ஊழியர் சரிபார்ப்பு

சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதி கிடைத்திட  நாம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்  அடிப்படையில் ஒரு பகுதி ஊழியர்களுக்கு  தீபாவளிக்கு முன்பு குறிப்பிட்ட தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. 

வழக்கு தற்போது 07/01/2021 அன்று விசாரணைக்கு வருகிறது.  தீபாவளிக்கு முன்பாக நடந்த பட்டுவாடாவில் பெரும்பகுதி ஊழியர்கள் விடுபட்டிருந்தனர். 

எனவே மாவட்ட நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட  ஒப்பந்தகாரர்களை ஆலோசித்து  மாவட்ட வாரியான ஒட்டுமொத்த ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலையும் அவர்களுக்கு வழங்கிட வேண்டிய சம்பளப்பாக்கித் தொகையினையும் இறுதி செய்து மாநில மையத்திற்கு அனுப்பி வைத்தன.  அந்த பட்டியலில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நேரடியா சரிபார்த்திட மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எனவே 04/01/2021 முதல் சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய 7 மையங்களில் நேரடி சரிபார்ப்பு நடைபெறும். தொழிலாளர் நல அதிகாரிகள், BSNL அதிகாரிகள், சங்கப்பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் சரிபார்ப்பில் கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உரிய ஆவணங்களோடு தயாராக இருக்கவும்.

No comments:

Post a Comment