Friday, 1 January 2021

 புத்தாண்டு பொலிவாகட்டும்...

 

பிறந்த புத்தாண்டு 

பெருஞ்சிறப்பை வழங்கட்டும்...

 

அறவழிகள் சிறக்கட்டும்... 

அன்புமொழி வளரட்டும்...

 

சமூக விலகல் அகலட்டும்..

சமூக தழுவல் மலரட்டும்...

 

வறட்சிக்கு வறுமை

வந்து தொலையட்டும்- எங்கும்

வளம் ஓங்கி வளரட்டும்...

 

வளத்துக்கு அச்சாணி...

வயல்வேலை தொழிலாளி...

 

வயல்வேலை தொழிலாளி

வாழ்வுக்கு வேட்டுவைக்கும்

வேளாண் சட்டங்கள்

வேரறுந்து வீழட்டும்..

 

விவசாயி போராட்டம்..

வெற்றிமுகம் காணட்டும்...

 

மத்தியில் ஆள்வோர்

மனக்கதவு திறக்கட்டும்...

 

மன்கீபாத்.... சற்று

மாற்றி ஒலிக்கட்டும்..

 

பிறந்த புத்தாண்டு 

பெருஞ்சிறப்பை வழங்கட்டும்...

 -----------------------------------------------------

 ந. நாகேஸ்வரன்

AIBSNLPWA மாவட்டச்செயலர்

காரைக்குடி.

No comments:

Post a Comment