Thursday, 30 April 2015

மே தின நல்வாழ்த்துக்கள்  
 உலகை சமைப்பவன் தொழிலாளி..
உலகை சுமப்பவன் தொழிலாளி...

மேதினக்கொண்டாட்டம் 
மேதினக்கொடியேற்றம் 

01/05/2015 

காலை 9 மணி 
தொலைபேசி நிலையம் 
தேவகோட்டை 

காலை 10 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி 

காலை 11.30 மணி 
தொலைபேசி நிலையம் 
சிவகங்கை 

நண்பகல் 01.00 மணி 
தொலைபேசி நிலையம் 
மானாமதுரை 

மாலை 03.00 மணி 
தொலைபேசி நிலையம் 
பரமக்குடி.

மாலை 05.00 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

சிறப்பு பங்கேற்பு 
தோழர். ஆர்.கே.,

தோழர்களே.. வருக 

அனைவருக்கும் 
உழைப்பாளர் தின 
நல் வாழ்த்துக்கள் 

Wednesday, 29 April 2015

தோழர்.முருகன் 
பணி நிறைவு விழா 
இன்று 30/04/2015

 பணி நிறைவு பெறும் 
NFTE மாவட்டத்தலைவர் 
TMTCLU மாவட்டச்செயலர் 
கலை இலக்கியக்காவலர் 

தோழர்.சி.முருகன் 
அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

அன்புடன்...
 
NFTE
TMTCLU
கலை இலக்கியப் பெருமன்றம் 
காரைக்குடி.

Tuesday, 28 April 2015

மே தினக்கொண்டாட்டம் 

இராமநாதபுரம் 
தோழர்.A .முனியசாமி TM 
பணி நிறைவு பாராட்டு விழா 

01/05/2015 - வெள்ளிக்கிழமை - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம். 

-:தலைமை:-
தோழர்.முருகன் மாவட்டத்தலைவர்

-:வரவேற்புரை : -
தோழர்.காந்தி கிளைச்செயலர் 

சிறப்புரை 
தோழர்.சேது 
தோழர்.ஆர்.கே.,
தோழர்.இராஜன் 
AITUC மாவட்டச்செயலர் 

மற்றும் தோழர்கள் 
தோழர்களே... வருக...

அன்புடன் அழைக்கும் 
NFTE  - TMTCLU 
மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.

Monday, 27 April 2015

வஞ்சனைப்பேய்கள் 


நாடு காத்திட.. நமது BSNL காத்திட 
நமது இரண்டு நாள் போராட்டம்..
நாடு முழுக்க நடந்து முடிந்துள்ளது.

கட்டபொம்மன்கள் காலமாகி விட்டாலும்...
எட்டப்பன்கள் மட்டும் எப்போதும் இறப்பதில்லை..
எந்த இயக்கத்திலும்.. 
எந்த போராட்டத்திலும்..
எந்த வேள்வியிலும்...
எட்டப்பன்கள் தங்கள் 
எட்டிக்குணத்தை.. 
எப்போதும் காட்டத்தவறுவதேயில்லை...
இதற்கு நமது  பகுதியும் விதிவிலக்கில்லை..

அதன் அடையாளங்கள்தான் ..
சென்னையில் தோழர்.மதிவாணன் மீது 
நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலும்...

நமது மாநிலச்செயலர் உள்ளிட்ட 
தமிழகத்தலைவர்கள் மீது 
தொடுக்கப்பட்டிருக்கும் போலி வழக்குகளும்...

இந்த அற்ப பதர்களை 
பாரதி சென்னையில்
பார்த்திருப்பான் போலும்..
எனவேதான் 
நெஞ்சு பொறுக்குதில்லையே  -இந்த 
நிலை கெட்ட மனிதரை 
நினைந்து விட்டால்.. 
என்று நொந்து பாடினான்..

எழுந்து நடப்பதற்கும் வலிமையற்ற 
எண்ணிலா மன நோயுடைய..
இந்த புல்லர்களை...
பொறியற்ற விலங்குகளை...
அவர்களுக்கு துணை போகும் 
அறிவிலிகளை..
தக்க விதத்தில் தண்டிப்போம்..

பயிர்களை விளைப்பது மட்டும் விவசாயமல்ல..
பாழும்  களைகளை களைவதும் விவசாயமே..

BSNLலில்...
களைகளைக் களைவோம்..
பயிர்களைக் காப்போம்..
நாட்டு நடப்பு...

  • தள்ளி வைக்கப்பட்ட JCM  தேசியக்குழுக்கூட்டம் டெல்லியில் 14/05/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தள்ளிவைப்பு" என்பதையே தனி AGENDAவாக கொடுத்து ஊழியர் தரப்பு JCMல் விவாதம் செய்ய வேண்டியுள்ளது. 
  • நமது வேலை நிறுத்தக்கோரிக்கைகள்  மீதான பேச்சுவார்த்தை DOT செயலருடன் 01/05/2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மோசமாக இருந்தால் கூட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
  • நட்டத்தில் இயங்கும் BSNL  மற்றும் AIR INDIA நிறுவனங்களை தற்போது விற்பனை செய்யும் உத்தேசம் அரசுக்கு இல்லையென மத்திய துணை நிதி மந்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட நிறுவனங்களை யாரும் வாங்க முன்வராததே இதற்கு காரணமாக இருக்கலாம்.
  • BSNLஐ மறுசீரமைப்பது பற்றி நமது இலாக்கா மந்திரி இதுவரை தொழிற்சங்கங்களிடம் வாய் திறக்கவில்லை. ஆனால் இது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவாதம் செய்துள்ளதாக தெரிகிறது. தொழிற்சங்கங்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் சங்கத்தின் பொதுச்செயலராக தேர்வு செய்து விட்டால் மந்திரிகளோடு பேச்சுவார்த்தைக்கு எந்த தடங்கலும் இருக்காது .
  • நேப்பாளத்திலும், சில  இந்தியப்பகுதிகளிலும் மிகக்கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார  பாதிப்பும்  ஏற்பட்டுள்ளது.  நமது பங்காக ஒரு நாள் சம்பளத்தை அளிக்கலாம். தோழர்கள் தயங்கினால் பிடித்தம் செய்யப்படவுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்த சம்பளத்தை நேப்பாள நிவாரண நிதியாக நிர்வாகமே  அளிக்கலாம். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும்   இரண்டு நாள் சம்பளத்தை  பிடிக்க ஏற்பாடு செய்யலாம்.

Friday, 24 April 2015

கூடாத கூட்டு ஆலோசனைக் குழுக்கள் 

தோழர்களே...
வர..வர.. மாமியார் கழுதை போலே ஆனாளாம்..
என்பது கிராமத்து சொலவடை.  இந்த சொலவடை முழுக்க முழுக்க நமது BSNL நிர்வாகத்திற்கு பொருந்தும் என்றால் அது சற்றும் மிகையாகாது. 

25/07/2014 அன்று காரைக்குடியில்  JCM  கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின் இன்று 25/04/2015 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
சரியாக  9 மாதங்கள் உருண்டோடிவிட்டன. 

இந்த 9 மாதத்தில் நாடாளுமன்றம் கூட 4 முறை கூடி விட்டது. 
சிறிய மாவட்டமான  காரைக்குடியிலே..
ஒரு JCM கூட்டத்தை நடத்துவதற்கு 
நமது அதிகாரிகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்றால் 
நாடாளுமன்றத்தை 4 முறை நடத்திய  
நாடு சுற்றும்  நரேந்திர மோடியின் சிரமங்களை 
நாம் எண்ணிப்பார்க்கின்றோம். 

காரைக்குடியில் மட்டும்தான்..இப்படியா என்றால் இல்லை...
நாடு முழுக்க நமது நிர்வாகங்கள்  இப்படித்தான்...

டிசம்பர் 2014ல் நடைபெற வேண்டிய அகில இந்திய JCM 
தள்ளி.. தள்ளி.. நடக்க முடியாமல் தள்ளாடி சென்று கொண்டிருக்கின்றது.

JCM என்பது ஊழியர் பிரச்சினைகளை அமைதியாக தீர்ப்பதற்கான அமைப்பு. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ 
அது இன்று சிதைக்கப்பட்டு 
அதன் நோக்கம் சிதையில் எரிக்கப்பட்டு விட்டது.
ஊழியர் தொந்தரவுகளை தீர்க்கும்  JCM கூட்டங்களை அதிகாரிகள்  தொந்தரவாக நினைக்கத்  துவங்கி விட்டனர். 
இத்தகைய நிலை எங்கும் மாற வேண்டும்...

ஊழியர் அமைதியில்தான் நிறுவனத்தின் அமைதி அடங்கியுள்ளது.
நிர்வாகம் புரியும் அதிகாரிகள்.. 
இந்த உண்மையைப்  புரிந்து கொள்ள வேண்டும்...

Thursday, 23 April 2015

காரைக்குடியின் கருப்பு அய்யர் 
தோழர். சி.முருகன்
 பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர்.முருகன் தனது துணைவியார் திருமதி.பானுமதியுடன் 
மாவட்டத்தலைவர் 
மனிதநேயப்பண்பாளர் 
கலை இலக்கிய காவலர் 
ஆத்தா சிறுகதை படைப்பாளி 
ஆற்றல்மிகு தொழிற்சங்கப் போராளி 

தோழர். சி.முருகன் 
பணி நிறைவுப்பெருவிழா 
மற்றும் 
சமூகப்பணி புகுவிழா 

30/04/2015 - வியாழன் - காலை 10 மணி 
அமராவதி மகால் 
காரைக்குடி.

தலைமை: தோழர்.வெ.மாரி 
மாவட்டச்செயலர் - NFTE 

வணக்கவுரை 
திருமதி.பாரதி நீலப்பிரியா M.A., B.Ed 
தோழர்.முருகன் அவர்களின் அன்பு புதல்வி 

வரவேற்புரை 
தோழர்.சுபேதார் அலிகான் 
NFTE - மாநில இளைஞரணி அமைப்பாளர் 

இசைமாலை 
தோழியர்.லதா 

இசையில் மாலை 
தோழர்.அறந்தை பாவா 

கவிமாலை
கவிஞர்.ந.சிதம்பரம் 

வாழ்த்து மாலை 

அன்பு அண்ணாச்சி 
தோழர்.பொன்னீலன் 

ஆற்றல்மிகு அன்புத்தலைவர் 
தோழர். ஆர்.கே., 

சிந்தனைச்செம்மல் 
தோழர். பட்டாபிராமன் 

பாட்டாளிகளின் பாதுகாவலர் 
தோழர். பழ.இராமச்சந்திரன் 

பொதுவுடைமை இயக்க வழிகாட்டி 
தோழர்.சேது 

பேனா விரும்பும் பேராசிரியர் 
தோழர்.பழனி இராகுலதாசன் 

 வற்றாத இலக்கிய வைகை  
தோழர். சந்திரகாந்தன் 

துணைப்பொதுமேலாளர் 
தோழர்.ஜெயச்சந்திரன் 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் 
தோழர். மு.சந்திரன் 

பொதுவுடைமை இயக்கப்போராளி 
தோழர்.பூபதி 

கோஷங்களால் கொள்கை சொல்லும் 
தோழர்.நாகேஸ்வரன் 

அறந்தையின்  அறிவாற்றல் 
தோழர்.சேதுபதி 

கலை இலக்கியத்தேனீ 
தோழர்.மணிபாரதி 

மற்றும் 
சக தொழிற்சங்கத்தலைவர்களும்... 
சகல தொழிற்சங்கத்தலைவர்களும்...

அனுபவ உரை 
தோழர்.முருகன் 

அனைவருக்கும் நன்றியுரை 
முருகன். லெனின் 

தோழர்களே...
கலையும்.. இலக்கியமும்..
சங்கமும்.. இயக்கமும்..
இரு கண்களென.. 
தன் வாழ்நாள் போற்றும்  
தோழர்.முருகன் 
பணி நிறைவுப் பெருவிழாவில் 
பங்கேற்க வாரீர்.. வாரீர்..

அன்புடன்  அழைக்கும் 

NFTE - TMTCLU 
மாவட்டச்சங்கங்கள் - காரைக்குடி மாவட்டம் 
மற்றும் 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
காரைக்குடி கிளை.

Wednesday, 22 April 2015

 கடைந்தெடுத்த.. கயமை...
(புள்ளி விவரங்களும்... விவரங்கெட்ட புள்ளிகளும்) 

தோழர்களே..

நமது இரண்டு நாள் போராட்டம் 
நாடு முழுக்க மிகுந்த முனைப்புடன் நடந்து முடிந்துள்ளது. 
அனைத்து அலுவலகங்களும்  
தொலை பேசி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. 
காரைக்குடி மாவட்டத்தில் 
மூடப்பட்ட அலுவலகங்களை படம் பிடித்து
பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. 

காரைக்குடி மாவட்டத்தில் பணி புரியும் 511 பேரில்...
AIGETOA சங்கத்தைச் சேர்ந்த 3 புத்திசாலி அதிகாரிகளும் 
ஊழியர்களில் புத்திசுவாதீனம்  கொண்ட 6 நபர்களும் சேர்த்து 
மொத்தம் 9 நபர்களே  பணிக்கு வந்தனர் என்பதுவே 
உண்மையான உண்மை.

ஆனால்.. 
430 தொழிலாளர்களில் 92 பேரும் 
81 அதிகாரிகளில் 47 பேரும்  
ஆக மொத்தம் 139 பேர் மட்டுமே 
பணிக்கு வரவில்லை என காரைக்குடி நிர்வாகத்தில் இருந்து  
மாநில நிர்வாகத்திற்கு போராட்ட புள்ளி விவரம் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் பணிக்கு வராதவர்களின் பட்டியலைப் பார்த்த போது 
8 ஆண்டுகளுக்கு முன்  ஓய்வு பெற்ற 
இராமநாதபுரம் சிங்கம் தோழர்.சவுக்கத் அலி அவர்களின் 
பெயரும்  கூட அதில் இடம் பெற்று 
பணிக்கு வராதவர்களின் பட்டியல் 
பணிக்கே  வர முடியாதவர்களின் பட்டியலாக தென்பட்டது...

இம்முறை ஊழியர்களும் 
துணைப்பொதுமேலாளர்கள் உள்பட அதிகாரிகளும்  
உணர்வோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர்...
உண்மை இவ்வாறிருக்க..

பணிக்கு வராதவர்களின் எண்ணிக்கையை 
திட்டமிட்டு குறைத்துக் காட்டியிருப்பது 
காரைக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவு அதிகாரிகளின் 
கடைந்தெடுத்த கயமை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம்...

கூட்டமைப்பு சார்பாக 
இந்த தறுதலைச்செயலை 
மிக வன்மையாக கண்டிக்கிறோம்..

அதிகாரத்தில் இருப்பவர்கள் 
அப்பனுக்கு பாடம் சொன்னவர்களாக இருக்கலாம்..
ஆனால் அது தப்பான பாடமாக இருக்கக்கூடாது..
தப்பான பாடங்கள் தொடருமேயானால்..
சரியான பாடம் புகட்ட நாம் தவற மாட்டோம்... 

Tuesday, 21 April 2015

இரங்கல் 

இராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் 
பணிபுரிந்த தோழர் 

R.கிருஷ்ணமூர்த்தி TM
மாரடைப்பால் இன்று 21/04/2015 காலமானார்.

சுறுசுறுப்பு மிகுந்த தோழர். 
 போன்மெக்கானிக்காக ஓட்டுநராக 
இலாக்காவிற்கு பணி செய்தவர்.
சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
 சகோதரர்கள் மூவரும் 
தொலைபேசியில் பணிபுரிந்ததும் 
NFTE சங்கத்தில் உறுப்பினராக 
இருந்ததும் மறக்க முடியாதது.

தோழர்கள் பாடுபட்டு... பாடுபட்டு 
பொருள் தேடுகின்றனர்..
ஆனால் பாழும் உடலைப் பேணுவதில்லை..

தோழர்.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு 
நமது நெஞ்சம் கசிந்த துயரத்தை வெளிப்படுத்துகிறோம்.
ஏப்ரல் 21
முதல் நாள் வேலை நிறுத்தம் 
காரைக்குடி பொதுமேலாளர்  அலுவலக
கதவுகள் தாள் மூடிய காட்சி 

காரைக்குடியில் 
முதல் நாள் போராட்டம் 
முழுமையான உணர்வுடன் நடந்தேறியது...

ஓரிரு சண்டாளர்களைத் தவிர 
தோழர்கள் சண்டமாருதமாய் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்...

எதிர்நிலை எடுக்காது... விடுப்பு எடுத்து
தங்கள் ஆதரவு தந்த FNTO தோழர்கள்...

இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்காக.. 
எட்டு  நாள் விடுப்பைத் தியாகம் செய்த .. 
மருத்துவ விடுப்பு மாமேதைகள்...

போராட்டத்திற்கு துணை நின்ற
துணைப்பொதுமேலாளர்கள்...

ஏப்ரல் மாதச்சம்பளத்தில்...
எடுப்புச்சம்பளம் இரண்டு நாள்தான் 
என்ற நிலையிலும் தயங்காது போராடிய தோழர்கள்...
என அனைவருக்கும் நமது நன்றிகள்..

முதல் நாள் முனைப்பு சிறிதும் குன்றாமல் 
இரண்டாம் நாள் போராட்டத்தையும் 
கூர் தீட்டுவோம் தோழர்களே...

Monday, 20 April 2015

முனைப்புடன்... முன்னேறு...
ஏப்ரல் 21 & 22
அகில இந்திய வேலை நிறுத்தம் 

நாளையும்.. இன்றும்..
நாடு காக்கும் போராட்டம்.... 
நமது BSNL காக்கும் போராட்டம்... 

நிறுவன முடக்கம் நீங்கிவிட.. 
நித்தப்பணியை நீயும் முடக்கி விடு...

பணி செய்யும் பாதகனை மறித்து விடு...
பார்வையால் கோழைகளை எரித்து விடு...

மருத்துவ விடுப்பில் மரித்து விடாதே...
மனக்குரங்கு பாதையில் சென்று விடாதே..

வியாதியஸ்தனைக்கண்டு வெம்பி விடாதே..
நோயாளிகளைக் கண்டு நொந்து விடாதே...

உப்பிட்ட தாய்க்கு கொடிய துயரம் என்றால்.. 
விரலை சப்பிட்டு நீயும் வேடிக்கை பார்த்திடாதே..

கால்களை விறைத்து முன்னேறு...
கரங்களை உயர்த்திப் போராடு..

காலம்  ஒரு நாள் கட்டாயம்  வெல்லும்...
சந்ததி  உன் பெயர்  மகிழ்ந்தே சொல்லும்..

Sunday, 19 April 2015

ஏப்ரல் 21 & 22 போராட்டம் 
20 அம்சக்கோரிக்கைகளின் 
இன்றைய நிலவரம் 

நமது கூட்டமைப்புத்தலைவர்கள் 
CMDயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 
நமது இருபது அம்சக்கோரிக்கைகள் மீதான
 நிர்வாகத்தின் நிலை  கீழே அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 20/04/2015 காலை 11 மணியளவில் 
நமது கூட்டமைப்புத்தலைவர்கள்  கூடி 
நாளைய போராட்ட திட்டம்  பற்றி விவாதிப்பார்கள்.

BSNL  பரிசீலித்துகொண்டிருக்கும் 
பிரச்சினைகளின் நிலவரம் 

  • BSNLலில் பணி அமர்த்தப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிப்பது விரைந்து முடிவெடுக்கப்படும்.
  • ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION அளிப்பது பற்றி முடிவு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ITI நிறுவனத்தின் மூலம் 20 சத உபகரணங்கள் மட்டுமே வாங்கப்படும். மேலும் இதற்காக எந்த முன்பணமும் ITIக்கு வழங்கப்படவில்லை.
  • அரசிடமிருந்து BSNLக்கு  வரவேண்டிய  6000 கோடி அலைக்கற்றை பணம் ஆண்டுக்கு 2000 கோடி என்ற அளவில் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய LICENSE FEE கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும்.
  • BSNL விரிவாக்கத்திற்காக 7000 கோடி வங்கிகளிடமிருந்து கடன் வாங்க DOT தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • OFC வழித்தடங்களை விரிவு படுத்துவதற்காக 4000 கிலோமீட்டர் OFC  கேபிள் BBNL நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. OFC பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய புதிய மென்பொருள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
  • நிறுவனத்திற்கு புதிய ஆளெடுப்பு தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
  • DELOITTEE குழு முடிவின் பாதகங்கள் பரிசீலிக்கப்படும்.

அரசு முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைகள் 

  • கிராமப்புற சேவைகளுக்கான சன்மானம் வழங்குதல் 
  • BSNL  துணை நிறுவனங்கள் உருவாக்கத்தை நிறுத்துதல் 
  • BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பை நிறுத்துதல்.
  • 1.2MHz அலைவரிசையை திருப்பி தரக்கோரும் TRAI பரிந்துரையை ரத்து செய்தல் 
  • இயக்குனர் காலியிடங்களை நிரப்புதல் 
  • சொத்துக்களை BSNLக்கு பெயர் மாற்றம் செய்தல் 
  • BSNL சேவையை அரசு இலாக்காக்களில் கட்டாயமாக்குதல் 
  • இலவச அலைக்கற்றை ஒதுக்கீடு 
  • அலைவரிசையை பயன்படுத்தும் அதிகாரத்தை  BSNLக்கு வழங்குதல் 
  • 4 G சேவை வழங்க அனுமதி 
  • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல் 
  • ஓய்வு பெறும் தோழர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் 

தோழர்களே...
உப்பிட்ட  நிறுவனத்தை..
உயிர் உள்ளளவும் நினைப்போம்...
நம் வாழ்வை வளமாக்கிய..
நமது நிறுவனத்தை வலுவாக்கிட.. 
நமது போராட்டத்தை வலுவாக்கிடுவோம்... 
நாளை நமதே... எந்த நாளும் நமதே...

Saturday, 18 April 2015

காரைக்குடி
வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 
AIBSNLEA அகில இந்திய ஆலோசகர்
தோழர்.VKP அவர்களுக்கு
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்
 பொன்னாடை அணிவித்தல் 

18/04/2015 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக வேலை நிறுத்த விளக்க கூட்டம் கூட்டமைப்புத்தலைவர்  தோழர்.மாரியின் தலைமையில்  
சிறப்புடன் நடைபெற்றது. 

அனைத்து சங்கத்தலைவர்களும் உரையாற்றினர்.
  BSNLEU சார்பாக அதன் மாநில அமைப்புச்செயலர் 
 தோழியர்.மல்லிகா அவர்களும், 
AIBSNLEA சார்பாக அதன் அகில இந்திய ஆலோசகர்
 தோழர்.VK.பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
தோழர்.VKP  சீர்மிகு BSNL நிறுவனம் ஆள்வோரால் 
இன்று சீரழிக்கப்பட்ட நிலையை சிந்தை உரைக்க கூறினார்.  
BSNL நிறுவனம் காத்திட  சிவப்புச் சித்தாந்த வழியில் அயராது  நடைபோடும் நமது தொழிற்சங்க இயக்கங்களின் பெருமையையும் நயமுடன் எடுத்துரைத்தார். 

வியாதிக்காக மருத்துவ விடுப்பு எடுக்கும் நிலை போய்..  
போராட்டக்காலங்களில்...
 மருத்துவ விடுப்பு எடுப்பதே ஒரு வியாதியாக
 போய்விட்ட நிலையையும் வேதனையுடன் குறிப்பிட்டார்.  

ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக பேசிய   தோழர்.மாரிமுத்து.. 
நடக்கவிருக்கும் போராட்டத்தில் 
ஒப்பந்த ஊழியர்கள்..
இத்தனை நாள் உரிமையை இழந்தோம்...
இன்று இந்த நிறுவனம் வளம்பெற 
இரண்டு நாட்கள் ஊதியத்தையும்  இழப்போம்...
என உறுதியளித்தார்.

உரிமை இழப்போம்..
ஊதியம் இழப்போம்..
ஒருநாளும் 
உணர்வை இழக்க மாட்டோம் 
என சூளுரைத்து கூட்டம் இனிதே முடிவுற்றது.

Friday, 17 April 2015

NFTE - BSNLEU - FNTO - SNATTA
AIBSNLEA - SNEA - AIBSNLOA
காரைக்குடி மாவட்ட சங்கங்கள்

போராட்ட விளக்க கூட்டம் 
18/04/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

VK.பரமசிவம் 
AIBSNLEA அகில இந்திய ஆலோசகர் 

M.மல்லிகா 
மாநில அமைப்புச்செயலர் - BSNLEU 

G.முத்துக்குமரன் 
மாவட்டச்செயலர்  - FNTO 

S.ஜெயச்சந்திரன் 
அகில இந்திய துணைத்தலைவர் - AIBSNLOA 

V .மோகன்தாஸ் 
மாவட்டச்செயலர் - AIBSNLEA

V .முத்துமணி 
மாநில செயற்குழு உறுப்பினர்  - SNEA 

P .செல்லப்பா 
மாவட்டச்செயலர்  - SNATTA 

P.மகாலிங்கம் 
மாவட்டச்செயலர்  - BSNLEU 

V .மாரி 
மாவட்டச்செயலர்  - NFTE 

தோழர்களே... வாரீர்...
ஏப்ரல் 21 & 22
எழுச்சியுடன் போராடுவோம்...

தோழர்களே....

நேற்று 17/04/2015 நமது கூட்டமைப்பின் சார்பாக போராட்ட கோரிக்கைகளின் மீது CMDயுடன் 3 மணி நேரத்துக்கும் 
அதிகமாக பேச்சுவார்த்தை   நடத்தப்பட்டது.  

நமது 20 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் 
முழுக்க மத்திய அரசு மற்றும் DOT சம்பந்தப்பட்டது. 
அந்த 17 கோரிக்கைகளில் 7  கோரிக்கைகளின் இன்றைய நிலவரம் 
STATUS பற்றி BSNL  நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

10 கோரிக்கைகள் முழுக்க முழுக்க 
 அரசுடன் விவாதிக்கப்பட வேண்டியது என BSNL கூறியுள்ளது. 

எனவே  BSNL  நிர்வாகம் தனது  வரம்புக்குட்பட்ட 
3 கோரிக்கைகளுக்கு மட்டுமே  பதில் அளித்துள்ளது. 

ஆகவே  17 கோரிக்கைகளுக்காக  நாம் அரசு மற்றும் DOT செயலருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆனால்  பிரதமருடன் வெளிநாட்டுப் பயணத்தில் உள்ள DOT செயலர்
 20/04/2015 அன்றுதான் தாயகம் திரும்புகிறார். 
 மேலும் இத்தனை மாத அவகாசம் இருந்தும் நமது இலாக்கா அமைச்சருக்கு நம்மை அழைத்துப் பேச நேரமில்லை. 

தோழர்களே.. 
இது நாடு காக்கும் போராட்டம்.. 
நமது வீடு காக்கும் போராட்டம்.. 
நமது வருங்கால வாழ்வு காக்கும் போராட்டம்..
எனவே நமது போராட்டம் திட்டமிட்டபடி  நடைபெறுகிறது. 
 கூட்டமைப்பு  20/04/2015 அன்று கூடி போராட்டத்திட்டங்களை வகுக்கும்.

தாயின் துயர் காணச்சகியோமோ ?
நாயென நாம் வாழ்வோமோ ?

பேயென நம்மைத் துரத்தும் 
நோய்களை  வளர்ப்போமோ?

தீயென பற்றி எரிவோம்...
தீரச்சேயென பெயர் சொல்வோம்..
நம் தாயணைய BSNL காப்போம்...
தாயினும் மேலாம் தேசம் காப்போம்...
எழுவீர்.. தோழர்களே..

Thursday, 16 April 2015

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 

வேலை நிறுத்த விளக்க கூட்டம் 

18/04/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம்
காரைக்குடி 

அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்பு..
 
தோழர்களே... வருக..

வேலை நிறுத்தம் 
இன்று CMDயுடன் பேச்சுவார்த்தை 

இன்று 17/04/2015 மாலை 4 மணிக்கு நமது CMDயுடன்
 அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் போராட்டக் கோரிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். 

09/04/2015 அன்று டெல்லியில் தொழிலாளர் நல ஆணையருடன் 
நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
 இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது.

ஒரிரு கோரிக்கைகள் மட்டுமே CMD வரம்புக்கு உட்பட்டது. 
ஏனைய கோரிக்கைகள் மத்திய அரசு தலையிட்டால் 
மட்டுமே தீரக்கூடியவை.  எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

( பேச்சு வார்த்தை நடைபெறுவதால்  தோழர்கள் 
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். 
உங்கள் உடல் நலம் சிறக்க நமது நல் வாழ்த்துக்கள் )
வேலை நிறுத்தம் 
தமிழக FNTO பங்கேற்பு 

ஏப்ரல் 21&22 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள 
FNTO அகில இந்திய சங்கம் முடிவெடுத்திருந்தாலும் 
தமிழக FNTO தடுமாறிக்கொண்டிருந்தது. 
 தமிழகத்தலைமை தடுமாறியது மட்டுமல்ல... 
தடம் மாறி போராட்டக் கோரிக்கைகளை 
எதிர்மறை விமர்சனம் செய்ய ஆரம்பித்தது.  

வள்ளிநாயகம் போன்ற மூத்த தோழர்கள் வளர்த்த
 FNTOவின்  இந்நிலை நமக்கெல்லாம் வருத்தத்தை அளித்தது. 

தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ள 
தமிழக FNTO  முடிவெடுத்துள்ளது. 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

Monday, 13 April 2015

ஏப்ரல் - 14
அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் 
சமூக விடுதலையின் தந்தை 
அண்ணல் அம்பேத்கார் அன்று..
சாதிக்கொடுமைக்கு சமாதி கட்டினார்...
சமூக விடுதலைக்கு தொட்டில் கட்டினார்..

ஆனால்... இன்று..
சமத்துவபுரத்திலே  சாதிச்சண்டைகள் ...
காந்திபுரத்திலே  கெளரவக்கொலைகள்...
அம்பேத்கார்புரத்திலே  அடிதடிகள்...

மீண்டும் வருவாரா?
மீட்பராக பிறப்பாரா?
ஏங்கித்தவிக்குது.. இந்திய தேசம்..


தமிழனுக்கு பெரும் குழப்பம்..
தமிழ்ப்புத்தாண்டு..
தை மாதமா? சித்திரை மாதமா?
தை என்று சொன்னால் 
அம்மாவுக்கு கோபம் வரும்..
சித்திரை என்று  சொன்னால் 
அய்யாவுக்கு கோபம் வரும்..
எதுக்கு வம்பு?
ஆங்கிலப்புத்தாண்டை 
அமோகமாக கொண்டாடி 
அம்மாவையும் அய்யாவையும் 
அன்போடு  மகிழ்விக்கலாம்..

சித்திரைத்திங்களில்.. 
சீர் மிகு காளை  கட்டி... 
சிறப்பு மிகு ஏர்  பூட்டி..
சின்னஞ்சிறு வயல் உழும்.. 
அப்பாவித் தமிழனுக்கு 
அன்பான நமது 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Sunday, 12 April 2015

NFTE 
சிவகங்கை மாவட்ட செயற்குழு 
சிவகங்கை தொலைபேசி நிலையம் முன்பு செயற்குழு  தோழர்கள் 
தோழர்களே...
வீரத்தாய் வேலு நாச்சியார் அவதரித்த... 
மருது சகோதரர்கள் என்னும் தீரர்கள் வாழ்ந்த..
சீர்மிகு  சிவகங்கைச்சீமையிலே...
நமது NFTE மாவட்டச்செயற்குழு சிறப்புடன் நடந்தேறியது.
நமது வழிகாட்டி தோழர்.சேது அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நீண்ட நாள் தேங்கிக்கிடக்கும்
நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்...
ஓய்ந்த நிலையிலும் BSNLஐ   
ஒட்டச்சுரண்டும் உன்மத்தர்கள்..

ஒப்பந்த ஊழியர்களிடம் கூட 
சில்லறை அடிக்கும் கல்லறை மனிதர்கள்..
SIDE BUSINESS சல்லாப அதிகாரிகள்....
இருந்தும் இல்லாத மாவட்ட நிர்வாகம்..
மெல்லச்சாகும் BSNL சேவை...

என தோழர்கள் தங்கள்  வேதனையை 
கோபத்தை செயற்குழுவில் வெளியிட்டனர்.

எனவே...காரைக்குடி மாவட்டத்தில்..
ஒப்பந்த ஊழியர்களுக்கு
தொடர்ந்து இழைக்கப்படும் வஞ்சனை தடுத்திடவும்..

நிரந்தர ஊழியர் உரிமைகளும்..
நிர்வாகத்தின் அக்கறையும்..
நிறுவனத்தின் சேவைகளும்...
கோமா நிலையில் இருக்கும் 
கொடுமை அகற்றிடவும் 

05/05/2015  செவ்வாய்க்கிழமை அன்று 
காரைக்குடி பொது மேலாளர் அலுவலகத்தில் 
அறப்போர் 
புரிந்திட செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது..

விதியே என நொந்து கிடக்க மாட்டோம்..
நிறுவனம் காக்க.. நமது உரிமைகள் காக்க 
வீதியில் இறங்கிப் போராடுவோம்...
வீறு கொண்டு வாரீர்.. தோழர்களே...
TMTCLU 
மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
பணி சிறக்க வாழ்த்துக்கள்
தோழர்.முருகன் அவர்களுக்கு
நமது வழிகாட்டி  தோழர்.சேது
பொன்னாடை போர்த்தும் காட்சி

தோழர்களே...
உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்காக 
உரிமைக்குரல் எழுப்பும் 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கமாம் 
TMTCLUவின்
காரைக்குடி மாவட்டச்செயலராக 
NFTE  மாவட்டத்தலைவர் 
அருமைத்தோழர்.சி.முருகன் அவர்கள் 
சிவகங்கை மாவட்டச்செயற்குழுவில் 
ஒருமித்த கருத்துடன் 
உற்சாக வரவேற்புடன் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அடிமட்ட ஊழியர்களின் 
ஆன்மாவை உணர்ந்த.. 
தோழர்.முருகன் அவர்களின் 
பணி சிறக்க வாழ்த்துக்கள்..

மூத்த ஒப்பந்த ஊழியர் 
தோழர்.மாரிமுத்து அவர்கள் 
மாவட்டத்தலைவராக 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடிமட்ட ஊழியராகவே தன் வாழ்நாள் 
முழுக்கப் போராடிக்கொண்டிருக்கும் 
தோழர்.மாரிமுத்து அவர்களின் 
பணி சிறந்திட வாழ்த்துகிறோம்...

மாவட்டச்செயலராக இது வரை சிறப்பாக 
பணிபுரிந்த பரமக்குடி தோழர்.இராமசாமி 
அவர்களை போற்றுகிறோம்...