கடைந்தெடுத்த.. கயமை...
(புள்ளி விவரங்களும்... விவரங்கெட்ட புள்ளிகளும்)
(புள்ளி விவரங்களும்... விவரங்கெட்ட புள்ளிகளும்)
தோழர்களே..
நமது இரண்டு நாள் போராட்டம்
நாடு முழுக்க மிகுந்த முனைப்புடன் நடந்து முடிந்துள்ளது.
அனைத்து அலுவலகங்களும்
தொலை பேசி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
காரைக்குடி மாவட்டத்தில்
மூடப்பட்ட அலுவலகங்களை படம் பிடித்து
பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
காரைக்குடி மாவட்டத்தில் பணி புரியும் 511 பேரில்...
AIGETOA சங்கத்தைச் சேர்ந்த 3 புத்திசாலி அதிகாரிகளும்
ஊழியர்களில் புத்திசுவாதீனம் கொண்ட 6 நபர்களும் சேர்த்து
மொத்தம் 9 நபர்களே பணிக்கு வந்தனர் என்பதுவே
உண்மையான உண்மை.
ஆனால்..
430 தொழிலாளர்களில் 92 பேரும்
81 அதிகாரிகளில் 47 பேரும்
ஆக மொத்தம் 139 பேர் மட்டுமே
பணிக்கு வரவில்லை என காரைக்குடி நிர்வாகத்தில் இருந்து
மாநில நிர்வாகத்திற்கு போராட்ட புள்ளி விவரம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு வராதவர்களின் பட்டியலைப் பார்த்த போது
8 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற
இராமநாதபுரம் சிங்கம் தோழர்.சவுக்கத் அலி அவர்களின்
பெயரும் கூட அதில் இடம் பெற்று
பணிக்கு வராதவர்களின் பட்டியல்
பணிக்கே வர முடியாதவர்களின் பட்டியலாக தென்பட்டது...
இம்முறை ஊழியர்களும்
துணைப்பொதுமேலாளர்கள் உள்பட அதிகாரிகளும்
உணர்வோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர்...
உண்மை இவ்வாறிருக்க..
பணிக்கு வராதவர்களின் எண்ணிக்கையை
திட்டமிட்டு குறைத்துக் காட்டியிருப்பது
காரைக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவு அதிகாரிகளின்
கடைந்தெடுத்த கயமை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம்...
கூட்டமைப்பு சார்பாக
இந்த தறுதலைச்செயலை
மிக வன்மையாக கண்டிக்கிறோம்..
கூட்டமைப்பு சார்பாக
இந்த தறுதலைச்செயலை
மிக வன்மையாக கண்டிக்கிறோம்..
அதிகாரத்தில் இருப்பவர்கள்
அப்பனுக்கு பாடம் சொன்னவர்களாக இருக்கலாம்..
ஆனால் அது தப்பான பாடமாக இருக்கக்கூடாது..
தப்பான பாடங்கள் தொடருமேயானால்..
சரியான பாடம் புகட்ட நாம் தவற மாட்டோம்...
No comments:
Post a Comment