Sunday 5 April 2015

வள்ளல் நாமம் வாழ்க.. வாழ்க..
வள்ளல் அழகப்பர் 
வானகம்   ஏப்ரல் 5
வையகம்   ஏப்ரல் 6
வள்ளல் அழகப்பர்...
குடியிருந்த கோவில்..
காரைக் குடியிருந்த கோவில்..

வள்ளல் அழகப்பர்...
வட்டிக்கடை திறந்த ஊரில் 
கல்விக்கண் திறந்த கடவுள்..

வள்ளல் அழகப்பர்...
அலைமகளை வணங்கும்    ஊரில் 
கலைமகளை  வணங்கிய    மாமனிதன்..

வள்ளல் அழகப்பர்...
செல்வப் பெட்டகம் திறக்கும் செட்டிநாட்டிலே...
அறிவுப்பெட்டகம் திறந்த அருமை அப்பச்சி...

வள்ளல் அழகப்பர்...
அடிமைக்குலங்களுக்கு...  
அறிவுக்கண் தந்த..குருசாமி...
காரைக்குடியின்.. குலசாமி...
வள்ளல் புகழ்.. வான்புகழ் கொள்க...

No comments:

Post a Comment