உறுதி கொண்ட TMTCLU
ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு
TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழுவில் மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே. உரையாற்றுகிறார் |
" நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது "
எரியும் நெருப்பிலே கூட உறங்கலாம்..
வயிறும் வாழ்வும் எரியும்...
வறுமையில் உறங்குவது..
வாழ்விலே இயலாத செயல் என
வள்ளுவன் வறுமையின் கொடுமை கூறுகிறான்...
வள்ளுவனும் ஒப்பந்த ஊழியனாய்
பணி செய்திருப்பான் போலும்...
இன்று BSNL நிறுவனத்தை தங்கள்
உழைப்பால் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும்
ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலையை
துன்ப நிலையைத் துடைத்திட
நமது TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்க
மாநிலச்செயற்குழு கடலூரில் சிறப்பாக நடந்தேறியது.
பல்வேறு தலைவர்கள்
தங்களது அனுபவங்களை வாழ்த்துரையாக வழங்கினர்.
மாநிலம் முழுவதுமிருந்து ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- முழுநேரப்பணி இல்லாமை..
- முறையான சம்பளம் வழங்காமை..
- குறித்த தேதியில் கூலி வழங்காமை..
- EPF பணத்தைக் கொள்ளையடித்தல்...
- மருத்துவ வசதி மறுப்பு..
- அடையாள அட்டை மறப்பு...
- போனஸ் என்றாலே வெறுப்பு
என.. தொடரும் அவலங்களாக
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகின்றன..
பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிர்வாகமோ..
ஒப்பந்த ஊழியரைப் பற்றி
எதுவும் பேசாதே..
எதையும் கேட்காதே..
எங்கும் பார்க்காதே..
என காந்தி மகானின்
கட்டுப்பாட்டு மந்திகளாய்..
கண்மூடி வாய்மூடி காது மூடி
கவிழ்ந்து கிடக்கும் பெரும் அவலம்...
எனவே...
உழைத்து உடல் தேயும்
ஒப்பந்த ஊழியரின் உரிமைகள் காத்திட...
அவர்கள் வியர்வை காயுமுன்னே கூலிகள் கிடைத்திட..
பொறுத்தது போதும் என முடிவு செய்து..
உழைப்பாளர் மாதமாம் மேத்திங்களில்...
சென்னையில் பொங்கி எழுந்திட...
மாநில செயற்குழு அறைகூவல் விடுத்துள்ளது..
அடிமட்ட மக்களே நமது தெய்வங்கள்
அவர்களுக்கு செய்யும் பணி..
ஆண்டவனுக்கு செய்யும் பணி என
அன்போடு கூறினார் விவேகானந்தர்...
அந்த மகான் கூறிய வழியில்...
அடிமட்ட ஊழியரை தலை நிமிர்த்திய
அன்புத்தலைவன் ஜெகன் பிறந்த மே திங்களில்..
அருமைத்தலைவன் குப்தா காட்டிய வழியில்...
அக்னி நட்சத்திரங்களாய்... சென்னையில்...
ஆர்ப்பரிப்போம்.. தோழர்களே....
சென்னை செல்வோம்.. இன்னல் தீர்ப்போம்...
No comments:
Post a Comment