கூடாத கூட்டு ஆலோசனைக் குழுக்கள்
தோழர்களே...
வர..வர.. மாமியார் கழுதை போலே ஆனாளாம்..
என்பது கிராமத்து சொலவடை. இந்த சொலவடை முழுக்க முழுக்க நமது BSNL நிர்வாகத்திற்கு பொருந்தும் என்றால் அது சற்றும் மிகையாகாது.
25/07/2014 அன்று காரைக்குடியில் JCM கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின் இன்று 25/04/2015 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 9 மாதங்கள் உருண்டோடிவிட்டன.
இந்த 9 மாதத்தில் நாடாளுமன்றம் கூட 4 முறை கூடி விட்டது.
சிறிய மாவட்டமான காரைக்குடியிலே..
ஒரு JCM கூட்டத்தை நடத்துவதற்கு
நமது அதிகாரிகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்றால்
நாடாளுமன்றத்தை 4 முறை நடத்திய
நாடு சுற்றும் நரேந்திர மோடியின் சிரமங்களை
நாம் எண்ணிப்பார்க்கின்றோம்.
காரைக்குடியில் மட்டும்தான்..இப்படியா என்றால் இல்லை...
நாடு முழுக்க நமது நிர்வாகங்கள் இப்படித்தான்...
டிசம்பர் 2014ல் நடைபெற வேண்டிய அகில இந்திய JCM
தள்ளி.. தள்ளி.. நடக்க முடியாமல் தள்ளாடி சென்று கொண்டிருக்கின்றது.
JCM என்பது ஊழியர் பிரச்சினைகளை அமைதியாக தீர்ப்பதற்கான அமைப்பு. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ
அது இன்று சிதைக்கப்பட்டு
அதன் நோக்கம் சிதையில் எரிக்கப்பட்டு விட்டது.
ஊழியர் தொந்தரவுகளை தீர்க்கும் JCM கூட்டங்களை அதிகாரிகள் தொந்தரவாக நினைக்கத் துவங்கி விட்டனர்.
இத்தகைய நிலை எங்கும் மாற வேண்டும்...
ஊழியர் அமைதியில்தான் நிறுவனத்தின் அமைதி அடங்கியுள்ளது.
நிர்வாகம் புரியும் அதிகாரிகள்..
இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment