Monday, 27 April 2015

நாட்டு நடப்பு...

  • தள்ளி வைக்கப்பட்ட JCM  தேசியக்குழுக்கூட்டம் டெல்லியில் 14/05/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தள்ளிவைப்பு" என்பதையே தனி AGENDAவாக கொடுத்து ஊழியர் தரப்பு JCMல் விவாதம் செய்ய வேண்டியுள்ளது. 
  • நமது வேலை நிறுத்தக்கோரிக்கைகள்  மீதான பேச்சுவார்த்தை DOT செயலருடன் 01/05/2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மோசமாக இருந்தால் கூட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
  • நட்டத்தில் இயங்கும் BSNL  மற்றும் AIR INDIA நிறுவனங்களை தற்போது விற்பனை செய்யும் உத்தேசம் அரசுக்கு இல்லையென மத்திய துணை நிதி மந்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட நிறுவனங்களை யாரும் வாங்க முன்வராததே இதற்கு காரணமாக இருக்கலாம்.
  • BSNLஐ மறுசீரமைப்பது பற்றி நமது இலாக்கா மந்திரி இதுவரை தொழிற்சங்கங்களிடம் வாய் திறக்கவில்லை. ஆனால் இது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவாதம் செய்துள்ளதாக தெரிகிறது. தொழிற்சங்கங்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் சங்கத்தின் பொதுச்செயலராக தேர்வு செய்து விட்டால் மந்திரிகளோடு பேச்சுவார்த்தைக்கு எந்த தடங்கலும் இருக்காது .
  • நேப்பாளத்திலும், சில  இந்தியப்பகுதிகளிலும் மிகக்கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார  பாதிப்பும்  ஏற்பட்டுள்ளது.  நமது பங்காக ஒரு நாள் சம்பளத்தை அளிக்கலாம். தோழர்கள் தயங்கினால் பிடித்தம் செய்யப்படவுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்த சம்பளத்தை நேப்பாள நிவாரண நிதியாக நிர்வாகமே  அளிக்கலாம். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும்   இரண்டு நாள் சம்பளத்தை  பிடிக்க ஏற்பாடு செய்யலாம்.

No comments:

Post a Comment