ஏப்ரல் 21 & 22 போராட்டம்
20 அம்சக்கோரிக்கைகளின்
இன்றைய நிலவரம்
நமது கூட்டமைப்புத்தலைவர்கள்
CMDயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்
நமது இருபது அம்சக்கோரிக்கைகள் மீதான
நிர்வாகத்தின் நிலை கீழே அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 20/04/2015 காலை 11 மணியளவில்
நமது கூட்டமைப்புத்தலைவர்கள் கூடி
நாளைய போராட்ட திட்டம் பற்றி விவாதிப்பார்கள்.
BSNL பரிசீலித்துகொண்டிருக்கும்
பிரச்சினைகளின் நிலவரம்
- BSNLலில் பணி அமர்த்தப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிப்பது விரைந்து முடிவெடுக்கப்படும்.
- ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION அளிப்பது பற்றி முடிவு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ITI நிறுவனத்தின் மூலம் 20 சத உபகரணங்கள் மட்டுமே வாங்கப்படும். மேலும் இதற்காக எந்த முன்பணமும் ITIக்கு வழங்கப்படவில்லை.
- அரசிடமிருந்து BSNLக்கு வரவேண்டிய 6000 கோடி அலைக்கற்றை பணம் ஆண்டுக்கு 2000 கோடி என்ற அளவில் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய LICENSE FEE கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும்.
- BSNL விரிவாக்கத்திற்காக 7000 கோடி வங்கிகளிடமிருந்து கடன் வாங்க DOT தனது ஒப்புதலை அளித்துள்ளது.
- OFC வழித்தடங்களை விரிவு படுத்துவதற்காக 4000 கிலோமீட்டர் OFC கேபிள் BBNL நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. OFC பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய புதிய மென்பொருள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
- நிறுவனத்திற்கு புதிய ஆளெடுப்பு தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
- DELOITTEE குழு முடிவின் பாதகங்கள் பரிசீலிக்கப்படும்.
அரசு முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைகள்
- கிராமப்புற சேவைகளுக்கான சன்மானம் வழங்குதல்
- BSNL துணை நிறுவனங்கள் உருவாக்கத்தை நிறுத்துதல்
- BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பை நிறுத்துதல்.
- 1.2MHz அலைவரிசையை திருப்பி தரக்கோரும் TRAI பரிந்துரையை ரத்து செய்தல்
- இயக்குனர் காலியிடங்களை நிரப்புதல்
- சொத்துக்களை BSNLக்கு பெயர் மாற்றம் செய்தல்
- BSNL சேவையை அரசு இலாக்காக்களில் கட்டாயமாக்குதல்
- இலவச அலைக்கற்றை ஒதுக்கீடு
- அலைவரிசையை பயன்படுத்தும் அதிகாரத்தை BSNLக்கு வழங்குதல்
- 4 G சேவை வழங்க அனுமதி
- ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்
- ஓய்வு பெறும் தோழர்களுக்கு ஓய்வூதிய திருத்தம்
தோழர்களே...
உப்பிட்ட நிறுவனத்தை..
உயிர் உள்ளளவும் நினைப்போம்...
நம் வாழ்வை வளமாக்கிய..
நமது நிறுவனத்தை வலுவாக்கிட..
நமது போராட்டத்தை வலுவாக்கிடுவோம்...
நாளை நமதே... எந்த நாளும் நமதே...
No comments:
Post a Comment