இன்று 15/12/20152 சென்னை CGM அலுவலகத்தில்
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின்
கருத்துக்கேட்புக் கூட்டம்
OPINION LEADERS MEETING நடைபெறுகின்றது.
-----------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 100 நாட்களை BSNLலில்
கனிந்த சேவைக்காலமாக
வாடிக்கையாளர்களுக்கு அளித்திட
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
வேண்டுகோள் விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பில்
ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து
22/12/2015 அன்று நாடு முழுக்க
கறுப்பு அட்டை அணியவும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
அறைகூவல் விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைத்தேர்விற்கான
HPC உயர்மட்டக் குழுவில்
HPC உயர்மட்டக் குழுவில்
SC/ST பிரிவிற்கான பிணைப்பு அதிகாரியும்,
LO (SCT) உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
11/12/2015 அன்று நமது மத்திய சங்கத்தலைவர்கள்
மனிதவள இயக்குநரை சந்தித்து
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு உதவுதல்,
JTO மற்றும் JAO காலியிடங்களை கணக்கிடுதல்,
JAO தேர்வில் வெற்றி பெற்று காலியிடம் இல்லாததால்
பயன் கிட்டாத தோழர்களுக்கு
தற்காலிகப் பதவி உயர்வு வழங்குதல்
ஆகியன பற்றி விவாதித்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களை
முறையாக அமுல்படுத்தக்கோரியும்,
ஒப்பந்தக்காரர்கள் விதிமுறைகளை
ஒழுங்காக பின்பற்றுகின்றர்களா
என்பதைக் கண்காணிக்க வேண்டியும்
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment