BSNL கட்டணக்குறைப்பு
நமது BSNL நிறுவனம்..
புதிய அலைபேசி வாடிக்கையாளர்களுக்கும்...
தனியார் தொலைத்தொடர்பில் இருந்து
நமது சேவைக்கு மாறுபவர்களுக்கும் (MNP)
80 சதக் கட்டணக்குறைப்பை
இரண்டு மாதங்களுக்கு அறிவித்துள்ளது...
காவல்துறையில் ஆய்வாளராகப் பணிபுரியும்
நண்பர் ஒருவர் இன்று அலைபேசியில் தொடர்பு கொண்டபோது...
அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு...
BSNL அறிவித்திருக்கும் அதிரடிச்சலுகை பற்றி
பெருமையாகக் குறிப்பிட்டோம்...
அவர் சொன்னார்...
புதிதாக வருபவர்களுக்கும்...
வேறு இடத்தில் இருந்து உங்களிடம்..
ஓடி வருபவர்களுக்கு மட்டும்தானே.. இந்தச்சலுகை...
ஆண்டாண்டு காலமாக BSNLஐ உபயோகிக்கும்..
எங்களுக்கு என்ன சலுகை? என்று கேள்வி கேட்டார்...
"ஓடிப்போன மைந்தனுக்குத்தான் உபசரிப்பு" என்று
நீங்கள் பைபிளில் படித்ததில்லையா? என்று எதிர்க்கேள்வி கேட்டோம்...
அவர் எரிச்சலோடு பேச்சை முடித்துக் கொண்டார்..
புதியவர்களைக் கவர
அதிரடிச் சலுகைகள் அவசியம்தான்..
ஆனால்.. ஆண்டாண்டு காலம்
நமது வாடிக்கையாளராக
இருப்போருக்கு என்ன சலுகை?
இப்போது.. நமது மனதுக்குள்ளேயே..
கேள்விகள் எழுகின்றன?..
No comments:
Post a Comment