Wednesday, 16 December 2015

beep song.. பீப்பசங்க...

மலராத பெண்மை மலரும்..
முன்பு புரியாத உண்மை புரியும்...

பாசமலர் படத்தில்...
வாராயோ தோழி வாராயோ 
என்ற பாட்டில் வரும்...
கவியரசர் கண்ணதாசனின் 
காலத்தால் அழியாத வரிகள்...

ஆனால் மேற்கண்ட வரியில் 
ஆபாசம் இருப்பதாக பெரும் விவாதம் எழுந்து 
தணிக்கை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்தனர்...
ஆனால் வரிகளில் உள்ள வார்த்தை அழகைக் கேட்டு மயங்கி...
தணிக்கை அதிகாரிகள் அனுமதித்ததாக  கூறுவார்கள்..

அது அந்தக்காலம்...
இந்தக்காலம் தொழில் நுட்பம் தலை விரித்தாடும் காலம்...
எந்த நாயும் எந்தக்கம்பத்திலும் சிறுநீர் கழிக்கலாம்...

நாடக மேடையிலும்.. கரகாட்ட நிகழ்ச்சிகளிலும் அன்று 
இலை மறைவு.. காய் மறைவாக விரசம் இருக்கும்..

இன்றோ இரண்டு தறுதலைகள்
 beep song என்ற பெயரில்.. 
காதால் கேட்க முடியாத வார்த்தைகளால்
காதல் பாட்டு பாடியுள்ளன...

செம்பரம்பாக்கம் இப்போது மறந்து போச்சு..
சிம்பு பாட்டு அவலாகிப் போச்சு...
பீர்பாலின் இருகோடு தத்துவங்கள்...

உடனே எதிர்ப்புக்குரல் கொடுத்த 
மாதர் சங்கத்தையும்  மாணவர்களையும்
மனதார நாம் பாராட்ட வேண்டும்...

தமிழர்கள் அரிதாரம் பூசியோரை 
அரியணையில் ஏற்றிய அப்பாவிகள்..
அதனால்தான் அரிதாரங்கள் இன்று 
அகம்பாவம் கொண்டு அலைகின்றன...
பண்பாட்டு பாதகம் செய்கின்றன...

காந்தி  தேசத்தில்...
தவறு செய்பவனுக்கு...தண்டனை உண்டா?
அது அவனிடம் உள்ள காகித  காந்தியைப் பொறுத்தது...

இங்கு..
அரசுகள் அசிங்கமாகிப் போயின..
இனி மக்களே அரசாகிப் போக வேண்டும்...

பெண்களை விளையாட்டுப் பொருளாக்கிய 
பிரேமானந்தா சாமியாரை..
புதுக்கோட்டையில்...
விளக்குமாற்றாலும்.. செருப்பாலும் 
பெண்கள் அன்று விளாசினார்கள்...
அந்தக்கூட்டத்தில் நமது தோழியர்களும் 
முறம் பிடித்து அறம் பாடினார்கள்...

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையைக் கொளுத்த பாரதி சொன்னான்...

இதோ.. இன்று..
இழிவு செய்யும் சிம்புகள்...
அரிதாரம் பூசிய பிரேமானந்தாக்கள்...

இழிவு செய்யும் மடையனைப் புடைத்திட...
பாரதியின் பெண்கள்... 
கண்ணகியின் சிவந்த கண்கள்...
விளக்குமாறும்.. செருப்பும்..கையிலெடுக்கும் நேரமிது...

No comments:

Post a Comment