ஒப்பற்ற தோழனுக்கு
உள்ளம் கசிந்த அஞ்சலி...
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்குப் பாடுபட்ட பொதுவுடைமைப் போராளி தோழர்.சிதம்பரநாதன் |
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்கான மாநிலக்கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற போது... |
தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின்
கூட்டமைப்புத் தலைவரும்.. நிறுவனரும்...
பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை நடத்தியவரும்..
சிறந்த பொதுவுடைமைப் போராளியும்...
NFTE சங்கத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்த
அருமைத்தோழியர்.தனம் அவர்களின் கணவருமான
அன்புத்தோழர். சிதம்பரநாதன் அவர்கள்
உடல்நலக்குறைவால் 15/12/15 அன்று
தன் இயக்கப்பணிகளை நிறுத்திக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சிக்கு
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்...
சிறந்த நண்பராக.. தோழராக..
வழிகாட்டியாக.. ஆசிரியராக...விளங்கியவர்...
1980களில் இராமநாதபுரத்தில் நடந்த சாதிக்கலவரத்தில்...
பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி..
சாதியால் ஒடுக்கப்பட்டத் தொலைபேசித் தோழர்களுக்கு..
வீட்டிலே அடைக்கலம் கொடுத்து
அவர்களை அன்போடு அரவணைத்தவர்...
மாணவர்களாக நாங்கள் இருந்தபோது...
தற்போது தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில்..
தொழிலாளர் நலத்துறை உயர் அதிகாரியாகப் பணிபுரியும்
கல்லூரித்தோழன் பாலச்சந்திரனோடு அடிக்கடி சென்று
தோழர். சிதம்பரநாதனிடம்...
மார்க்சீய அரிச்சுவடி கற்றது..
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்...
உருண்டோடும் வாழ்க்கையில்...
ஊனங்களைக் கண்டு தளர்ந்து விடாது..
சக்கர நாற்காலியில் உருண்டோடி..
ஊனமுற்ற தோழர்களின் உயர்வுக்குப்பாடுபட்ட..
தோழர்.சிதம்பரநாதன்
அவர்களுக்கு வீரவணக்கம்..
--------------------------------------------------------------------------------------------------------------------------
இறுதி நிகழ்வுகள் 17/12/2015 வியாழன் அன்று
சென்னைக் கோட்டுர்புரத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment