டிசம்பர் 17
ஓய்வூதியர் தினம்
குப்தாவைக் கும்பிடுவோம். |
வாழ்நாளெல்லாம் மக்களுக்காக, தேசத்திற்காக, தான் பணி புரிந்த நிறுவனத்திற்காக உழைத்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் இன்று டிசம்பர் 17 தினத்தை ஓய்வூதியர் தினமாக போற்றுகின்றனர்.
ஓய்வு பெற்றவர்களை ஒரு குறிப்பிட்ட தேதியின் அடிப்படையில் தரம் பிரிக்க கூடாது, அவர்களது கடந்த கால சேவையைக்கணக்கில் கொண்டு அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற
உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கொண்டாடும் விதமாக
இன்றைய தினம் போற்றப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரத்தில் இராமு என்ற TM தோழர் பணியில் இருக்கும் போது இறந்தார். அவரது குடும்பத்திற்கு பணிக்கொடையாக 10 லட்சம், குடும்ப ஓய்வூதியமாக மாதம் 18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இங்குதான் தோழர். குப்தாவை
நெஞ்சம் நிறைய நினைத்துப் பார்க்கின்றோம்.
BSNL என்ற நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு மிக மூர்க்கமாக முடிவெடுத்த போது மிக தீர்க்கமாக போராடி நமது ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தியவர் தோழர். குப்தா.
BSNL தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவனது DOT கால சேவைக்கு ஓய்வூதியம் உண்டு என்ற அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் தோழர். குப்தா.
ஒரு அடிமட்ட தொழிலாளி இறந்து விட்டால் அவனது குடும்பத்திற்கு அதிக பட்ச பணிக்கொடையும் ஓய்வூதியமும் கிடைத்திருப்பதில்
தோழர். குப்தாவை இருகரம் கூப்பி கும்பிடுகின்றோம்.
தோழர்களே..
ஓய்வூதியம் தொழிலாளர்களின் வாழ்நாள் உரிமை ஆகும்.
ஆனால் திட்டமிட்டே அது இந்த அரசால் பறிக்கப்பட்டு விட்டது.
2004க்குப்பின் ஓய்வூதிய முகம் சிதைக்கப்பட்டு விட்டது.
2000க்குப்பின் BSNLலில் பணியமர்ந்த தோழர்களுக்கு
இன்னும் புதிய ஓய்வூதிய திட்டம் அமுலாக்கப்படவில்லை.
மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்...
20 ஆண்டுகள் சேவைக்கு முழு ஓய்வூதியம் என்ற நிலையை அடைந்துள்ளோம். ஆனாலும் 33 ஆண்டுகள் பணி செய்தால்தான்
முழு பணிக்கொடை GRATUITY வழங்கப்படுகின்றது.
ஓய்வூதியம் போலவே 20 ஆண்டுகள் சேவைக்கு
முழு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.
தற்போது அதிகபட்சமாக 10 லட்சம் மட்டுமே பணிக்கொடையாக வழங்கப்படுகின்றது. இந்த உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
ஓய்வூதிய முன்பணம் COMMUTATION வழங்கப்படுவதற்கான
கணக்கீடு மாற்றப்பட வேண்டும்.
தற்போது 80வது வயதில் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படுகின்றது.
இது ஓவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே உயர் விகிதத்தில் வழங்கப்படுகின்றது. இது 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும்.
இது போல்.. ஓய்வூதியர்களுக்கு இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இவைகளை போராடி போராடியே நாம் பெற வேண்டும்.
இன்றைய ஓய்வூதிய தினத்தில்
நமக்கு ஓய்வூதியத்தை உறுதிப்படுத்திட்ட
நமக்கு இறுதிக்கால பாதுகாப்பை தந்திட்ட
நமது ஓய்வூதிய தந்தை
தோழர். குப்தாவை நன்றியுடன் நினைவு கூர்வோம்..
No comments:
Post a Comment