NATIONAL JCM
தேசியக்குழு கூட்ட முடிவுகள்
புதிய அங்கீகார விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்
முதன்முறையாக NFTE -BSNLEU இணைந்த JCM தேசியக்குழு கூட்டம் 23/12/2013 அன்று சிறப்புடன் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- ஊழியர்களின் தேக்கநிலை நீக்கம் STAGNATION பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட்டாலும் முடிவுகள் எட்டப்படவில்லை. நான்கு கட்டப்பதவி உயர்வின் போது 3 சத ஆண்டு உயர்வுத்தொகை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சினை மேலும் விவாதிக்கப்படும்.
- போனஸ் வழங்குவது பற்றி அதற்கான குழு ஆராய்ந்து வருகின்றது.
- ஓய்வூதியர்களுக்கான 78.2 சத இணைப்பு மற்றும் நிலுவை சாதகமாக முடிக்கப்படும்.
- 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் அனைத்துப்படிகளும் வழங்குவதும், LTC, மருத்துவப்படிகள் வழங்குவதும் BSNL நிறுவனத்தின் நிதி நிலை மேம்பாட்டிற்குப் பிறகு பரிசீலிக்கப்படும்.
- 4 கட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவின்படி சரி செய்யப்படும்.
- BSNLலில் நேரடி நியமனம் பெற்ற தோழர்களின் ஓய்வூதியப்பிரச்சினை விவாதம் செய்யபட்டது. நிர்வாகத்தின் 2 சத பங்களிப்பு என்பது நம்மால் ஏற்கப்படவில்லை. பிரச்சினை மேலும் விவாதிக்கப்படும்.
- பதவிகள் இல்லாததால் TM பதவி உயர்வு பெற இயலாத தோழர்களின் பிரச்சினை பற்றி கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
- சிறிய மாவட்டங்களில் JCM அவசியமில்லை என்ற நிர்வாகத்தின் கருத்து ஊழியர் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் ஒரேயொரு சங்கம் உள்ள இடங்களில் அந்த சங்க உறுப்பினர்கள் மட்டும் கொண்ட JCM நடத்த முடிவெடுக்கபட்டுள்ளது.
- கருணை அடிப்படையில் வேலை என்பதற்குப்பதிலாக நட்ட ஈடு வழங்கும் முறை என்பதை ஊழியர் தரப்பு நிராகரித்து விட்டது. தற்போதுள்ள முறையை செழுமைப்படுத்த வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
- ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிப்பது, பணிக்கலாச்சாரத்தை மேம்படுத்துவது என்பது நடைமுறைப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment