Wednesday 18 December 2013

BSNL மற்றும் MTNL 
நிறுவனங்களின் செயல்பாடு 

18/12/2013 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 
பதில் அளித்த நமது இலாக்கா அமைச்சர் திரு. கபில் சிபல் 
BSNL மற்றும் MTNL  நிறுவனங்களின் செயல்பாடு 
தொடர்ந்து  கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக 17/04/2013 அன்று அமைச்சர் குழு நியமிக்கபட்டதாகவும் 
அக்குழு 12/06/2013, 01/08/2013 மற்றும் 12/09/2013 ஆகிய தேதிகளில் கூடி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர் குழு முடிவுகள் 

  • MTNL ஊழியர்களுக்கு BSNL ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்குதல்.
  • BSNL க்கு 6 மாநிலங்களிலும், MTNLக்கு மும்பை மற்றும் டெல்லி பகுதிகளிலும் BWA - அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருதல்.
  • BSNL உருவாக்கத்தின் போது முதலீட்டிற்காக வழங்கப்பட்ட 7500 கோடி கடனில் திருப்பிச்செலுத்தாத கடனை வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்தல்.


தங்களது செயல்பாடு மற்றும் நிதிநிலை மேம்பாட்டிற்காக 
BSNL  மற்றும் MTNL  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிய கட்டண விகிதங்களை அறிவித்தல், புதிய தொழில் நுட்பங்களை புகுத்துதல், புதிய தலைமுறை வலைப்பின்னலை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment