Tuesday, 3 December 2013

காரைக்குடி 
JCM தலமட்டக்குழு முடிவுகள் 
  • காலியாக உள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புக்கள் வாடகைக்கு விடப்படும். இதன்படி காலியாக உள்ள பரமக்குடி குடியிருப்பு RMS அலுவகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. சிவகங்கை தொலைபேசி நிலையத்தில் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாடகைக்கு வர உள்ளது. காரைக்குடி பொதுமேலாளர் அலுவகத்தின் சில பகுதிகள் வாடகைக்கு தயாராக உள்ளது. இது பல பகுதிகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
  • காரைக்குடியில் காலியாக உள்ள 5ம்நிலை குடியிருப்பு ஆய்வுஇல்லமாக மாற்றப்படும்.
  • அனைத்து JCM,WORKS COMMITTEE, WELFARE COMMITTEE  உறுப்பினர்களுக்கும் இலவச SIM வழங்கப்படும்.
  • NFTE சங்க அலுவலகத்திற்கு அகன்ற அலைவரிசை இணைப்புடன் கணிணி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
  • அனைத்து அலுவலகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படும். நாற்றம் பிடித்த கழிவறைகள் நறுமணம் கமழ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய இருக்கை வசதி செய்து தரப்படும்.
  • அனைத்து ஊழியர்களுக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
  • வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், வசதியுள்ள அலுவலகங்களிலும் ATM  பணம் தரும் இயந்திரம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் வசூலாகும் பணத்தை வங்கிகளில் கொண்டு போய் கட்டுவதற்கு உரிய CONVEYANCE  ALLOWANCE மாதந்தோறும் வழங்கப்படும்.
  • அனைத்து TM, TTA தோழர்களுக்கும் உரிய கருவிகள் வழங்கப்படும்.
  • SALES, UDAAN போன்ற பிரிவில் பணிபுரிவோருக்கு புதிய தோள்பையும் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
  • நாலு கட்டப்பதவி உயர்வில் விடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தண்டனை MINOR PENALTY பெற்றவர்களின் பதவி உயர்வும் பரிசீலிக்கப்படும். தற்காலிக தண்டனைக்காலம் முறைப்படுத்தப்படும்.
  • மிக நீண்ட காலமாக பட்டுவாடா செய்யப்படாத மிகுதி நேரப்படியை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தனியார் பேருந்தில் பயணம் செய்ததால் மறுக்கப்பட்ட LTC BILLகள் பட்டுவாடா செய்யப்படும்.
  • 78.2 சத IDA இணைப்பில் விடுபட்டவர்களுக்கும், குறையுள்ளவர்களுக்கும் சம்பள நிர்ணயம் உடனே செய்யப்படும்.
  • ஓய்வு பெறும் அன்று 100 சத விடுப்புச்சம்பளம் வழங்குவது பரிசீலிக்கப்படும்.
  • தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கப்பட்ட மருத்துவ பில்கள் பரிசீலிக்கப்படும்.
  • விடுபட்ட தோழர்களுக்கு சைக்கிள் படி வழங்கப்படும்.
  • TTA கேடரில் விடுபட்டவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும்.
  • TTA 10 சத பங்கில் தகுதி உள்ள தோழியரின் விவரங்கள் மாநில அலுவகத்திற்கு அனுப்பப்படும்.
  • ஆளற்ற தொலைபேசி நிலையங்களுக்கு TM கேடரில் விருப்பம் கேட்கப்படும் .
  • 50 இணைப்புக்களுக்கும் குறைவாக உள்ள தொலைபேசி நிலையங்களை மூடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
  • TM, TTA கேடர்களில் விருப்ப மாற்றல் அமுல்படுத்தப்படும்.
  • அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் தோழர்களுக்கு அலைச்சல் படி கொடுப்பது பற்றி ஆராயப்படும்.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF, ESI , வசதிகள் வழங்குவது, உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவது, அடையாள அட்டை வழங்குவது , போனஸ் வழங்குவது என்பவை நடைமுறைப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment