Monday 16 December 2013


BSNL
சாய்ந்து வரும் கோபுரம் 
2010ல் செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு  விடுவது என BSNL முடிவெடுத்திருந்தாலும் BSNLன் வழக்கமான மெத்தனம் காரணமாக தனது வலைப்பின்னலை சரிவர பயன்படுத்தவில்லை என DOT கருதுகின்றது. 
எனவே  NETWORK எனப்படும் வலைப்பின்னல் அமைப்பை 
தனி நிறுவனமாக மாற்றுவதற்கு   மத்திய அமைச்சரவையின் அனுமதியைக்கோரி DOT குறிப்பு அனுப்பியுள்ளது. 

தற்போது BSNLலில் ஏறத்தாழ 62 ஆயிரம் செல் கோபுரங்கள் உள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய வலைப்பின்னல் வசதி நமது நிறுவனத்திடமே உள்ளது. இந்த செல் கோபுரங்கள் மூலம்  
ஆண்டுக்கு 1000 கோடி வியாபாரம் செய்ய இயலும் என DOT கருதுகின்றது. இன்னும் 10 ஆண்டுகளில் 2500 கோடி வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளதாக DOT கணக்கிட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் கோபுரங்களை எட்ட  இயலும் என்றும், இதன் மூலம் தனியார்களுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் பெருக்க இயலும் என்றும் 
DOT திட்டமிட்டுள்ளது.

புதிய நிறுவனம் ஏறத்தாழ 7300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும். அசையா சொத்துக்கள் மட்டும்  6500 கோடி இருக்கும். சுமார் 3000 ஊழியர்கள் இதன் பணிக்கு தேவைப்படுவர்.   புதிய நிறுவனத்தின் சொத்துக்கள் மாற்றம் மற்றும் பத்திர பதிவிற்காக  475 கோடி  செலவாகும். இதனை தள்ளுபடி செய்ய டெல்லி அரசை DOT கேட்டுக்கொண்டுள்ளது. BSNL நிறுவனத்திடமிருந்து சுமார் 2500 கோடி 
12 சத வட்டியில் கடனாகப்  பெறப்படும். 

தோழர்களே..
நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள் நமது தொழிற்சங்க கூட்டங்களில் தொடர்ந்து இந்த பிரச்சினையை கூறி வந்தார்.  
வராத போனசுக்கு வருத்தப்படவும், தலைவர்களை வறுத்தெடுக்கவும் தெரிந்த நமக்கு வரக்கூடிய அபாயத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. ஏற்கனவே BBNL என்ற நிறுவனம் அகன்ற அலைவரிசை பணிக்காக  ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தற்போது செல் கோபுரங்களும் நம்மை விட்டு சென்று விட்டால் 
வெறும் தரைவழி இணைப்புக்கள் மட்டுமே நமது வசம் இருக்கும். 

நமது சிறகுகள் திட்டமிட்டு வெட்டப்படுகின்றன. 
நம்மைச்சுற்றி நடப்பதை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய 
நிலையில் நாம் உள்ளோம்.  ஆனால் நாம் இன்னும் நமக்குள்ளேயே உழன்று வருகின்றோம். 

BSNL என்னும் வானளாவிய கோபுரம் 
திட்டமிட்டு சிறிது சிறிதாக சாய்க்கப்படுகின்றது. 
தொழிற்சங்கங்கள் என்ற முறையில்.. 
நமது பணி என்ன? பாதை என்ன?  
என்பதுதான்.. இன்றுள்ள கேள்வி.. 
சிந்திப்போம்.. தோழர்களே.. 

No comments:

Post a Comment