தமிழ் மாநில
சேமநலநிதிக்கூட்ட முடிவுகள்
தோழர்களே...
நமது தமிழ் மாநில சேமநலநிதிக் கூட்டம் 29/11/2013 அன்று சென்னையில் புதிய மாநில அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டச்செயலர் தோழர். ஸ்ரீதர் கலந்து கொண்டார்.
கூட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- ஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் பரிசுக்காசோலை ரூ.1200ல் இருந்து ரூ.2000/= ஆக உயர்த்தப்படும்.
- மூக்கு கண்ணாடிக்கு வழங்கப்படும் தொகை ரூ.400ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும்.
- சேமநலநிதி பகுதியில் பணி புரியும் தோழர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படும். பொருளருக்கும், எழுத்தருக்கும் 250ல் இருந்து 500 ஆகவும், காசாளருக்கும், GR'D ஊழியருக்கும் 125ல் இருந்து 250 ஆகவும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
- ஊழியர் சந்தா மாதம் ரூ. 50/= அனைத்து மாவட்டங்களிலும் பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் பேசி அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
- திருமணக்கடன் சில மாவட்டங்களில் 50 ஆயிரம் வழங்கப்படுகின்றது. இது அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட அறிவுறுத்தப்படுகின்றது.
- அனைத்துக்கடன் தொகையும் நேரடிப்பட்டுவாடா RTGS/NEFT முறை மூலம் வழங்கப்படும்.
- வங்கிக்கடன் பெறுவோருக்கு காப்பீடு செய்வது பற்றி CORPORATE அலுவலகத்திற்கு எழுதப்படும்.
- கல்வி உதவித்தொகை, புத்தக விருது ஆகிய உயர்வு பற்றியும், மகளிருக்கு இரண்டாவது முறை மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வசதி பற்றியும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
No comments:
Post a Comment