Monday, 7 September 2015

GPF முன்பண மாற்றம் 
CONVERSION OF GPF ADVANCE INTO WITHDRAWAL 

GPF வைப்புநிதியில் பெறப்பட்ட முன்பணத்தை  
WITHDRAWAL ஆக மாற்றும் வசதி தற்போதைய ERPயில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. பல தோழர்கள் GPF முன்பணத்தை  அலுவலகத்தில் கட்டிய பின்னும் அந்தப்பணம் கணக்கில் வரவு வைக்கப்படாமல் GPF முன்பணப்பிடித்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இப்பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வாக 
டெல்லி நிர்வாகம் சில குறிப்புகளைக் கொடுத்துள்ளது. 

அதன்படி..

ஊழியர்கள் GPF முன்பண மாற்றத்தை ESS எனப்படும் 
ERP ஊழியர் சுய சேவையின் மூலம் விண்ணப்பிக்க அவசியமில்லை.
தங்களது விருப்பத்தை சம்பந்தப்பட்ட 
கணக்கு அதிகாரியிடம் எழுத்து மூலம் தெரிவித்தால் போதும். 

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்ட இப்பிரச்சினைக்கு 
தற்போதேனும் தற்காலிகத்தீர்வு ஏற்பட்டுள்ளதே என்று 
நமது தோழர்கள் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

முன்பணத்தை WITHDRAWAL ஆக மாற்றுவதற்காக 
கடன் வாங்கி 80 ஆயிரம் கட்டி விட்டு 
கவலையோடு காத்திருந்த 
இராமேஸ்வரம் தோழர்.ஆவுல் அவர்களின் 
பிரச்சினை இத்தோடு ஒரு முடிவுக்கு வருகின்றது.

No comments:

Post a Comment