Thursday 14 November 2019


ஓடா(த) போன்... VODA FONE...
செய்தி – விகடன் இணையம்...

இந்தியாவில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும்
சில வருடங்களுக்குமுன் கோலோச்சிக் கொண்டிருந்தன.
ஆனால்  ஜியோவின் வருகையால்
தொலைத்தொடர்புத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பல நிறுவனங்கள்
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
இதன் காரணமாக வோடோஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும்
இந்தியாவில் கூட்டாக இணைந்து சேவைகளை வழங்க முடிவு செய்தன.
இதனால் VODAFONE IDEA  என்னும்
புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் உதயமானது.
ஆனால் ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே
பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது அந்நிறுவனம்.
இந்தியாவில் வோடோஃபோன் 
கலைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே
விலையை நிர்ணயிப்பதில் நிலவும் போட்டியால்
வோடோஃபோன்-ஐடியாவின் மொத்த மதிப்பு
பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

வோடோஃபோனின் தலைவர் நிக்ரெட் கூறுகையில்...
இந்தியாவில் வோடோஃபோன் 
கலைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்வதில்
ஏதேனும் உதவி செய்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்" என்றார்.
ஜூன் 2018-ல் வோடோஃபோன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு
சுமார் 2 பில்லியன் யூரோவாக இருந்தது.


ஆனால், வோடோஃபோன் ஐடியா இணைப்புக்குப் பிறகு
இந்த வருடம் மே மாதத்தில் அதன் சொத்து மதிப்பானது
1.5 பில்லியனாகக் குறைந்தது. வோடோஃபோனின்
இந்த வருட நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலான சறுக்கல்கள்
இந்தியாவிலிருந்தே வந்துள்ளன.

இதில் குறைந்த மதிப்பு தொடர் நஷ்டங்கள், குறைந்த பண சுழற்சி,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுஇந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூறுகையில்...
 வோடோஃபோன் ஐடியாவின் இழப்பை ஈடுசெய்யும்
எண்ணம் இல்லாததால் எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு
பூஜ்யமாகக் குறைந்துள்ளது.

செயல்பாட்டுச் செலவுகளாலும் உச்ச நீதிமன்றத்தின்
Adjusted gross revenues குறித்த தீர்ப்பாலும் நிகழ்ந்துள்ளது" என்கின்றனர்.
இதுதொடர்பாக லண்டனில்...
நிதிநிலை அறிக்கையை  வெளியிட்டுப் பேசிய நிக்ரெட்
இந்தியாவில் வோடோஃபோன் நிறுவனத்தின் சேவை கலைக்கப்படலாம்.
இதற்கு அரசாங்கம் ஏதாவது தீர்வு அளித்தால் மட்டுமே முடிவுக்கு வரும்.
இல்லாவிட்டால் இதுவே இறுதி முடிவாக இருக்கும்.
இப்போதுள்ள சூழ்நிலை ஆபத்தாக உள்ளதால்
தீர்வுகள் கிடைக்கவில்லையென்றால் வேறு வழியில்லை.
இதற்கு மேல் தொழில் செய்வதற்கான சாத்தியங்கள்
இல்லையெனில் நிறுவனத்தைக் 
கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக வோடோஃபோன் நிறுவனம் 
Adjusted gross revenues-க்காக உச்ச நீதிமன்றத்துக்கு 80,000 கோடி ரூபாயைக் கட்ட வேண்டும்' என்பதுதான்.

இத்தொகையை ஏர்டெல் நிறுவனமும் கட்ட வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜியோ நிறுவனம் இதைவிடவும்
குறைவான தொகையை செலுத்தினால் போதுமானது.

இந்தியாவில் அதிக அந்நிய முதலீடுகள் செய்வதில்
வோடோஃபோன் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.
இந்த நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையால்
இனிமேலும் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதில்லை
என்ற முடிவுக்கு வந்துவிட்டது வோடோஃபோன்.

இது இந்திய நாட்டின் அந்நிய முதலீடுகளின் மதிப்பை நிச்சயம் பாதிக்கும்.
இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு
அதற்கேற்ற தொழில் சூழ்நிலைகளை உருவாக்கித் தர வேண்டியது
அரசின் கடமையாகும். வோடோஃபோன் நிறுவனமும்
இந்தியச் சந்தையைவிட்டு விலக முடிவு செய்துவிட்டால்
இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில்
ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் மட்டுமே இருக்கும்.
அது ஆரோக்கியமான போட்டியாக இருக்காது...
எனவும் குரல் எழுப்புகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
VODAFONE...  ஓடாத போனாக இந்திய சந்தையை
விட்டுச்செல்லும் நிலை உருவாகிவிட்டது....
AIRTEL நிறுவனமும் தொடர்ந்த நட்டத்தை சந்தித்து வருகிறது...
இந்நிலையில் JIOவிற்குப் போட்டியாக உள்ள ஒரே நிறுவனம்...
மக்கள் நிறுவனமான BSNL மட்டுமே...
இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில்...
BSNLக்கு நல்ல எதிர்காலம் உள்ள நிலையில்....
இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்த ஊழியர்களை... அதிகாரிகளை...
விருப்ப ஓய்வில் வெளியே தள்ளுவது என்ன நியாயம்?
ஊழியர்களே இல்லாமல் BSNL எவ்வாறு புத்துயிர் பெறும்?
இது JIO நிறுவனம் கோலோச்சுவதற்கான வழியல்லவா?

No comments:

Post a Comment