Monday 18 November 2019


உண்ணாவிரதப் பேச்சுவார்த்தை

சம்பள உயர்விற்காகப் பேச்சுவார்த்தை நடத்திய காலம் போய்....
சம்பளத்திற்கே பேச்சுவார்த்தை நடத்தும் காலம் வந்து விட்டது.

AUAB உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பையொட்டி
நேற்று 18/11/2019 மனிதவள இயக்குநர் DIRECTOR(HRD)
அனைத்து சங்கத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை விவரம் 

அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் மாதக்கடைசி வாரத்தில் பட்டுவாடா செய்யப்படும். ஒப்பந்த ஊழியர்களுக்கும் பாக்கிச்சம்பளத்தில் ஒருபகுதி வழங்கப்படும். GST வரி பாக்கி மற்றும் வங்கிக்கடன் ஆகியவை செலுத்தப்பட்டு விட்டன.

விருப்ப ஓய்வில் ஊழியர்கள் சென்ற பின்பு BSNL  நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி நவம்பர் 26 அன்று அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.

மார்ச் 2020ல் 4G சேவை BSNLலில் துவக்கப்படும். 
3G சேவையை 4G சேவையாக மாற்றுவதற்காக
ZTE நிறுவனத்துடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

01/01/2017 முதல் 100 சத விலைவாசிப்படியை அடிப்படைச்சம்பளத்துடன் இணைப்பது பற்றி
DOTயுடன் விவாதிக்கப்படும்.

ஓய்வூதிய மாற்றத்திற்கு ஊதியமாற்றம் அவசியம் என்ற நிபந்தனையை நீக்குவது பற்றி DOTயுடன் விவாதிக்கப்படும்.

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவற்றில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இவை யாவும் உரிய மட்டத்தால் தெளிவு படுத்தப்பட வேண்டும். உரிய விளக்கங்கள் அளிக்கும்வரை விருப்ப ஓய்வு அளிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். 


ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 58ஆகக்குறைப்பது 
என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
என சங்கங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் பணிபுரியும் எல்லை என்பது 
SSA என்னும் மாவட்ட அளவிலே தொடரவேண்டும். 
ஊழியர்களுக்கு மாநில அளவில் மாற்றல் என்பதை 
ஏற்றுக்கொள்ள முடியாது. வணிகப்பகுதி அளவில் 
மாற்றல் என்பதும் ஏற்க முடியாதது. BA உருவாக்கத்தில் 
CORPORATE அலுவலக சீரமைப்புப்பிரிவு வெளியிட்ட 
ஊழியர் விரோத உத்திரவு திரும்பப் பெறவேண்டும்.

ஜனவரி 2020க்குள் CONFIRMATION இல்லாத ஊழியர்களுக்கு 
உத்திரவு இடப்பட வேண்டும். நாலுகட்டப்பதவி உயர்வு உத்திரவுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். மாநிலத்தலைமை அதிகாரிகளுக்கு இது பற்றி அறிவுறுத்தப்பட வேண்டும்.

CORPORATE அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள் ஊழியர்கள் மத்தியில் பயத்தையும் பீதியையும் உருவாக்கி வருகின்றனர். 
KPI எனப்படும் செயல்திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. நிர்வாகத்தின் 
இது போன்ற உதவாத செயல்களை சங்கங்கள்
வன்மையாகக் கண்டிக்கின்றன.

மேற்கண்ட அனைத்துப்பிரச்சினைகளையும் பரிசீலிப்பதாக ஒத்துக்கொண்ட மனிதவள இயக்குநர் DIRECTOR(HRD) 
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கூட்டமைப்பு சார்பாக 
எந்த முடிவும் சொல்லப்படவில்லை.

No comments:

Post a Comment