Thursday 21 November 2019


விருப்ப ஓய்வு... CMDயின் அறிவுறுத்தல்கள்...

இன்று  VRS சம்பந்தமாக நடைபெற்ற தெற்கு மண்டல காணொலிக்காட்சியில் விருப்ப ஓய்வு சம்பந்தமான பணிகளை விரைந்து முடித்திட BSNL CMD வலியுறுத்தியுள்ளார்.

CMD வலியுறுத்தியவை...

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களை
மகிழ்ச்சியான மனநிலையில் அனுப்பி வைத்திட வேண்டும்.

விருப்ப ஓய்வு சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் 
டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஓய்வூதியம் சம்பந்தமான DOTயின் வழிகாட்டுதல்கள் திங்கள்கிழமை வெளியிடப்படும்.

விருப்ப ஓய்வு சம்பந்தமாக ஊழியர்கள்
அனைவரும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

டிசம்பர் மாதம் BSNLக்கு வங்கிக்கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே டிசம்பர் மாதம் அனைத்துப்  பிடித்தங்களும் பட்டுவாடா செய்யப்படும்.

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை வெகுவிரைவில் பரிசீலித்து ஓய்வூதியம் வழங்கிட DOTCELL கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 ஆகிய இரண்டு மாதங்கள் வைப்புநிதி GPF பிடித்தம் செய்யப்படாது.

விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றி இந்த வார இறுதிக்குள் ஊழியர்களின் ESS இணையதளத்தில் ஊழியர்கள் பார்க்கும் வகையில் விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

விருப்ப ஓய்விற்குப்பின் மாநிலங்கள் இணைப்பு உள்ளிட்ட
நிறைய மாற்றங்கள் BSNLலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

விருப்ப ஓய்விற்குப்பின் சேவையைத் தடையின்றி நடத்துவதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பல்வேறு பணிகளைத் தனியாருக்கு விடுதல் என்பவை பற்றி மாநிலங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment