Tuesday, 30 May 2017

பணிநிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/05/2017 
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் தோழர்கள்

கடமையில் கருத்தான
பாதரக்குடி S.கணேசன் TT/KKD

காரைக்குடியின் கடைசி ஓட்டுநர்
S.ணேசன் DRIVER/RND 

பரமக்குடியின் பாசமிகு தோழர்
P.இராஜேந்திரன் TT/PMK

தந்திப்பகுதியின் தடயம்..
M.வைரவன் TT/PNK

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
 சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்...
--------------------------------------------------------------------------------
BSNLலில் இப்போது இலையுதிர்க்காலம்....
தமிழகத்தில் இம்மாதம் 179 பேர் பணிநிறைவு...
இந்த நிதியாண்டில் 1088 பேர் பணிநிறைவு...
நடப்பது பணிநிறைவல்ல... பணி விரைவு...

Monday, 29 May 2017

செயற்கைக்கோள் தொலைபேசி சேவை

இந்தியாவில் இராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே செயல்படும்  செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை 
சாதாரண மக்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

தற்போது நமது தேசத்தில் 1532 இணைப்புகளே செயல்பட்டு வருகின்றன. இயற்கைப்பேரிடர் போன்ற காலங்களில்… தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்து போகும் காலங்களில் செயற்கைக்கோள் தொலைபேசி மிக அவசியமாகிறது.

INMARSAT எனப்படும் INTERNATIONAL MOBILE SATELLITE ORGANISATION அமைப்புடன் இணைந்து நமது BSNL நிறுவனம் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை அளித்திட முடிவு செய்துள்ளது. 

முதற்கட்டமாக இரயில்வே, இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைக்குழுக்கள் போன்றவற்றிற்கு சேவை வழங்கப்படும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நமது CMD தெரிவித்துள்ளார். 

தற்போது செயற்கைக்கோள் தொலைபேசியின் விலை ஏறத்தாழ 40 ஆயிரம் ஆகும். ஒரு நிமிடத்திற்கு 30 ரூபாய் முதல் 35 வரை கட்டணமாகிறது. அதிகப்படியான பயன்பாட்டிற்கு வரும்போது கட்டணங்கள் மிகவும் குறையும். 

தற்போதைய தொலைத்தொடர்பு சேவை செல்கோபுரங்களின் 
COVERAGE 25 முதல் 30 கிமீ வரையாகும். 
ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையில் 
38000 கிலோமீட்டர் வரை SIGNALS கிடைக்கும்.

தொலைத்தொடர்பில் ஒரு மாபெரும் புரட்சிக்காக...
செயற்கைக்கோள் தொலைபேசி சேவை காத்திருக்கிறது…

Friday, 26 May 2017

கவன ஈர்ப்பு நாள்

BSNL ஊழியர்களுக்கு உடனடியாக
ஊதியமாற்றக்குழு அமைக்க..
DPE ழிகாட்டுதல் வெளியிடக்கோரி…

லாபம் நட்டம் பாராமல்.. 
15 சத ஊதிய உயர்வை வழங்கக்கோரி…

BSNL தொழிற்சங்கங்களின் 
தேசிய கூட்டமைப்பு சார்பாக

14/06/2017  நாடு தழுவிய
கவன ஈர்ப்பு நாள்

தோழர்களே… அணி திரள்வீர்….
பணிவிழா சிறக்கட்டும்…
இன்று 27/05/2017 புதுகை நகரில் நடைபெறும்
NFTE மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர்
அன்புத்தோழர்.ஆசைத்தம்பி 
அவர்களின் பணிவிழா 
சிறக்க நல்வாழ்த்துக்கள்…

Thursday, 25 May 2017

போய் வா நதியலையே…
கவிஞர் நா.காமராசன் 
பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன்
இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்
இது கவிஞர் நா.காமராசன் வரிகள்
சிறந்த மரபுக்கவிஞராக உருவாகி
திரைப்படக்கவிஞராக உருமாறிய
தன் நிலை பற்றிய
அவரது வேதனை வரிகள் இவை

நா.காமராசன்
போர்க்களத்தில் தமிழ்மொழி காத்த தமிழின் பிள்ளை
புதுக்கவிதையை வளர்த்தெடுத்த பாரதியின் தம்பி
உவமைக்கவிதையின் ஊற்றான சுரதாவின் சீடன்
திராவிடத்திற்கும் பொதுவுடமைக்கும் தோழன்

இரவெரிக்கும் பரிதியை
ஏழை விறகெரிக்க வீசுவேன்
ஒளிகள் பேசும் மொழியிலே  
நான் இருள்களோடு பேசுவேன்
என ஏழைகளின் இருள் பேசியவர்

வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற
வஞ்சிக்கோ மான்விழிகள்
என உற்சாக உவமை சொல்லியவர்

அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர் இளநீரோ
எனத் தமிழால் பிள்ளையைத் தாலாட்டியவர்...

நிர்வாணத்தை விற்கிறோம்...
ஆடைகள் வாங்க...
என்று பாலியல் தொழிலாளியின் 
பாடுகளைப் பாடல்களாக்கியவர்...

இதோமறைந்து விட்டார்
தமிழை மறந்து விட்டார்
அவர் மறைந்தாலும்மறந்தாலும்
தமிழுலகம் அவரை மறக்காது

போய் வா…தமிழலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

Wednesday, 24 May 2017

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு நடத்துவதற்கு 
மறுஅறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 09/07/2017 
தேர்வுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி…

தேர்வு நடைபெறும் நாள் : 20/08/2017
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 15/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/07/2017

பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்…
RM/GR’D ஊழியர்கள் மற்றும் 
TSM ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்..

2016ம் ஆண்டிற்கான ஆளெடுப்பாக நடத்தப்படும்..
தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது…
தேர்வு அந்தந்த மாநிலத்தலைநகரில்.. நடைபெறும்…

தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
ஆனாலும் கல்வித்தகுதி தளர்த்தப்படவில்லை.
நமது துறையில் பெரும்பான்மையான GR’D தோழர்கள் 
பத்தாம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள்தான். 
எனவே தற்போதைய தேர்வு அறிவிப்பால் 
அடிமட்ட ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை. 
கல்வித்தகுதியைத் தளர்த்தி… 
ஒரு கட்டமாக ஒரு சிறப்புத்தேர்வு நடத்தினால் மட்டுமே
ஊதியத்தில் தேக்கநிலையிலும்… 
உத்தியோகத்தில் ஏக்க நிலையிலும் உள்ள 
அடிமட்ட RM/GR’D ஊழியர்கள் பலன் பெறுவர்...
அந்நாள் எந்நாளோ?

Tuesday, 23 May 2017

தொலைத்தொடர்புத் தீவு…
இராமேஸ்வரம் அன்று தீவு…
இன்றோ இரயில் பாலம்… பேருந்துப்பாலம் என
நிலப்பகுதியோடு நீக்கமற இணைந்து விட்டது…
ஆனாலும் நமது BSNLஐப் பொருத்தவரை…
இராமேஸ்வரம் அடிக்கடி துண்டிக்கப்பட்ட தீவாகிவிடுகிறது….

இராமேஸ்வரத்தில் அடிக்கடி OFC ROUTE துண்டிக்கப்படுகிறது…
OFC ROUTE துண்டிக்கப்பட்டால் மாற்று வழி ஏதுமில்லை…
துண்டிக்கப்பட்டவுடன் இணைப்பு சரிசெய்யப்படுவதில்லை..
மணிக்கணக்கில்… சமயங்களில் நாள்கணக்கில் ஆகிவிடுகிறது…
20/05/2017 அன்று OFC ROUTE துண்டிக்கப்பட்டது…
ஆனால் அதைச்சரிசெய்ய சுமார் 30 மணி நேரமாகிவிட்டது…
வங்கிச்சேவைகள் அனைத்தும் 
BSNL இணைப்பில் இருப்பதால்..
ATM எதுவும் வேலை செய்யவில்லை…
வங்கிப்பணிகள் முழுமையாக முடங்கி விட்டன…
இது ஏதோ ஒரு நாள் நிகழ்வல்ல…
அடிக்கடி நடக்கும் அன்றாட நிகழ்வாகிவிட்டது….

சேவை பாதிப்பால் ஏராள வருவாய் இழப்பு ஏற்படுகிறது…
வாடிக்கையாளர்கள் மிகுந்த கோபம் கொண்டு
நம்மைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்…
மக்கள் மத்தியில் இருந்த நமது மரியாதை
முற்றிலுமாக இப்போது தகர்ந்து விட்டது…
நமது ஊழியர்கள் கூட வேறுவழியின்றி
தனியார் SIMமும் கூடுதலாக வைத்திருக்க வேண்டிய
அவலத்திற்கு ஆளாகி விட்டார்கள்….

அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா
அவர்களின் காலத்தில் இது போன்ற பிரச்சினைகள்
அடிக்கடி ஏற்பட்டு அவர் இது சம்பந்தமாக
நமது தோழர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்…
பழுதுகள் தொடர்வது என்பது வாடிக்கையாகிப்போனால்
தாமே மக்கள் மன்றத்தில் போராட்டம் 
செய்ய வேண்டி வரும் என்றும் கூறினார்..
நல்லவேளை அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை…

BSNLEU பொதுச்செயலர் அருமைத்தோழர்.அபிமன்யு அவர்கள்
இராமேஸ்வரம் வந்திருந்தபோது இது பற்றி முறையிட்டோம்…
அவரும் ஆவண செய்வதாக உறுதி அளித்துச்சென்றார்…
மேலும் இந்தப்பிரச்சினை நமது RJCMலும் விவாதத்தில் உள்ளது…

இந்தப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன…
இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பாதையில் 
அருள்மிகு முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ள
பிரப்பன்வலசை என்னும் ஊர் உள்ளது…
அங்கே RING உள்ளது… RING ROUTE அமைக்க வேண்டும்…
சுமார் 22 கிலோமீட்டர் தூரம் ஆகும்…
மேலும் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன்,
மண்டபம்,வேதாளை, உச்சிப்புளி,பெருங்குளம் வழியாக
இராமநாதபுரம் வரையுள்ள கோபுரங்களை
இணைப்பதன் மூலம் மாற்று வழி செய்ய முடியும்…

இராமேஸ்வரம் 
இந்திய தேசத்தின் மிக முக்கிய ஆன்மீக நகரம்…
ஆயிரக்கணக்கான… 
சமயங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்…
நமது சேவையை சிறப்பாக கொடுப்பதன் மூலம்…
மிகுந்த வருவாய்ப் பெருக்கத்தை நாம் ஈட்ட முடியும்…
தேவையெல்லாம்...
இராமேஸ்வரம் பற்றிக்கூடுதல் கவனம் செலுத்துவதே…
திரு.பாலுச்சாமி SDE அவர்கள் 
மாற்றலாகிச்சென்ற பின் ஐந்தாறு ஆண்டுகளாக…
நிலையான அதிகாரி இராமேஸ்வரம் நிலையத்தில் இல்லை…
மாவட்ட நிர்வாகமும்… மாநில நிர்வாகமும்
இராமேஸ்வரம் பகுதிக்கு 
சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே
இங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு…
 ================================================
எதிர்பார்ப்புடன்…
இராமேஸ்வரம் வாடிக்கையாளர்கள் 
மற்றும் ஊழியர்கள் சார்பாக 
B.இராஜன் 
NFTE மாவட்ட உதவிச்செயலர்
 இராமேஸ்வரம்… 9486108856.

Monday, 22 May 2017

 BSNL அருங்காட்சியகம்
சென்னை RTTC அருங்காட்சியகம் 
சென்னை புறநகர்ப் பகுதியான மறைமலைநகரில் உள்ள 
BSNL  நிறுவனத்தின் RTTC டெலிகாம் பயிற்சி நிலையத்தில் 
உள்ள தொலைத்தொடர்பு அருங்காட்சியகத்தைப் பற்றி 
அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்
உண்மையில்  பலருக்கு இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் 
வாய்ப்பும் கிடைத்திருக்காது. நம் சென்னைப் பொக்கிஷங்களில் 
ஒன்றாக இருந்து வரும் இந்தத் தொலைத்தொடர்பு அருங்காட்சியகம் 
பல வரலாற்று ஆவணங்களைக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை பல பரிணாமங்கள் எடுத்துள்ளதை நாம் அறிவோம்குறிப்பாக அதிகளவிலான தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. தொலைத்தொடர்பு சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தும்  நம் இளைய தலைமுறை  இதன் வரலாற்றை அறிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்று.

ஒரு போன் காலில் இன்று வெகுசுலபமாகப் பேசிவிடுகிறோம்
ஆனால் அன்று அது எவ்வளவு கடினம் என்று கடந்த தலைமுறைக்கு நிச்சயம் தெரியும். இன்றைய அபரிமிதமான தொலைத்தொடர்பு வளர்ச்சிக்குப் பின்னால் அன்றைய தொலைத்தொடர்பு தொழிலாளர்களின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கின்றன

அன்று ஒரு போன் கால் பேச  பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்
ஒரு புதிய தொலைபேசி சேவையைப் பெற பல மாதங்கள்  வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்படியே காத்திருந்து பெற்றாலும் ஒரு போன் கால் பேசி முடிப்பதற்குள் அத்தனை பிரச்னைகள் எழும்
அடிக்கடி போன் மற்றும் லைன் பிரச்சினை… 
கொர கொர சத்தம் இப்படிப் பல சிக்கல்களைப் பயனாளர்கள் சந்தித்தார்கள்சேவை வழங்கும் தொலைத்தொடர்பு துறையோ  அதற்குமேல் பல சிக்கல்களைச் சந்தித்தது. தொடர்புகொள்ள காத்துக்கிடக்கும் மக்களைச் சமாளிப்பது முதல் மண்ணைத் தோண்டி தொடர்பு இணைப்புகளைச் சரிப்படுத்துவது வரை அவர்களின் பணியும் கடுமையாகவே இருக்கும். இவை அனைத்தும் சில பகுதி மட்டுமே.

இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்
இப்படிப்பட்ட தொலைத்தொடர்பு வரலாற்றை மறைமலை நகர் அருங்காட்சியகம்  நம் கண்ணெதிரே கொண்டுவந்துவிடும்.
இங்கு நாம் பயணித்தால் ஆரம்பகால தொலைத்தொடர்பு முறைகளை முழுவதுமாகத் தெரிந்துகொள்வதோடு  பழைமை வாய்ந்த பல தொலைத்தொடர்பு சாதனங்களையும் இங்கு பார்க்கலாம்
மிக முக்கியமாகத் தந்திக்கருவிகள்
இதைப் பயன்படுத்தும் முறை.. 
தொலைபேசி உருவான வரலாற்றுப் பலகைகள்… 
பழைமை வாய்ந்த தொலைபேசிக் கருவிகள்… 
டிரங்க் கால் இயக்கப்படும் முறை… 
டிரங்க் கால் பரிணாமம் அடைந்த வரலாறு… 
தானியங்கி இணைப்பகம்.. 
தொலைத்தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட கம்பியின் வகைகள்.. 
தொலைத்தொடர்பு நிலையம் இயங்கும் முறை… 
அலைவரிசைத் தகவல்கள் மட்டுமல்லாமல்  
இன்று பயன்படுத்தப்படும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள்
செயற்கைக்கோள் பயன்பாடுகள் வரை 
அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்

தற்போது பல கல்லூரி மாணவர்களுக்குத் தொலைத்தொடர்பு சார்ந்த வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் எடுத்துவருவதால்  சென்னை BSNL-RTTCயிடம் அனுமதி பெற்று ஒரு விசிட் அடிக்கலாம்.

இங்கு பொழுதைக் கழிப்பதற்கு ஒன்றும் இல்லை
பொழுதைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள 
ஆயிரம் வழிகள் இருக்கின்றன

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது 
தெரிந்தும் நம்மால் சும்மா இருக்க முடியுமா?
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி - விகடன் இதழ்...

அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி 
மக்களுக்குப் பயனுள்ளதாகவும்...
நமது நிறுவனத்திற்கு 
பணமுள்ளதாகவும்...  மாற்றினால் நன்று...