Saturday, 20 May 2017

உணர்வுமிகு ஒப்பந்த ஊழியர் ஆர்ப்பாட்டம்

NFTCL நெல்லை மாநிலச்செயற்குழு முடிவின்படி...
20/05/2017 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் 
முன்பாக ஒப்பந்த ஊழியர்களின் உணர்வுமிகு ஆர்ப்பாட்டம் 
மாவட்டத்தலைவர் தோழர்.முருகன் அவர்கள்
தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. 
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்
கோரிக்கை முழக்கமெழுப்பினார். 
மூத்த தோழர்.பூபதி வாழ்த்துரை வழங்கினார்.
NFTCL மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து...
NFTCL மாநில செயல்தலைவர் தோழர்.மாரி
ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். 
ஜுன் 10 அன்று சென்னையில் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்திற்குப் பெருவாரியான அளவில் தோழர்கள் 
கலந்து கொள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 
NFTCL மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர்
நன்றியுரைக்க கூட்டம் உணர்வோடு முடிந்தது.
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment