Thursday 11 May 2017

JCM தேசியக்குழுக்கூட்டம்

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் நடந்து முடிந்து 
ஓராண்டு கழித்து 11/05/2017 அன்று JCM தேசியக்குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

  • ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் விவாதிக்க முடியாது என்ற உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மாநில நிர்வாகங்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களும், நலத்திட்டங்களும் அமுலாக்கப்படுவது  பற்றி மாதந்தோறும் தலைமயகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும்… தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல எனவும்.. இது சம்பந்தமாக மாநில நிர்வாகங்கள் உரிய வகையில் அறிவுறுத்தப்படும் எனவும்  நிர்வாகம் கூறியுள்ளது.
  •  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TM தேர்வில் பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மட்டுமே பங்கு கொள்ளமுடியும். பத்தாம் வகுப்பு தகுதியைத் தளர்த்துவதற்கு போன்மெக்கானிக் ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே அடுத்த தேர்வில் இது பற்றி பரிசீலிக்கப்படும்.
  • நீதிமன்ற உத்திரவான SR.ACCOUNTANT  சம்பள விகிதம் உயர்த்துதல் மற்றும் தகுதி உயர்த்துதல்  DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அமுல்படுத்தப்படும்.

  • 22/07/1997 முதல் 03/10/2000 வரை இலாக்காப்பதவி உயர்வுத்தேர்வுகளில் SC/ST ஊழியர்களுக்கு சலுகை வழங்குவது என்பது சிக்கலான பிரச்சினையாகும். ஆனாலும் தனிநபர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். மேலும் SC/ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு செய்வது பற்றிய DOTயின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.
  • தேக்கநிலை ஊதியம் பற்றி DOTயின் வழிகாட்டுதல் பெறப்பட்டு முடிவு செய்யப்படும்.
  • PENSION CONTRIBUTION ON ACTUAL PAY - வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பங்களிப்பு என்பது பற்றி BSNL நிர்வாகத்தால்  ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
  • நிலுவைப்பிடித்தம் சம்பந்தமாக அனைத்து மாவட்டங்களிலும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அதுவரை நிலுவைப்பிடித்தம் நிறுத்தி வைக்க உத்திரவிடப்படும்.
  • 2015ல் நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்வது பற்றி பரிசீலிக்கப்படும்.
  • BSNL நியமன ஊழியர்களிடம் முன் தேதியிட்டு EPF பங்களிப்பு பிடித்தம் செய்வது EPF விதிகளுக்கு முரணானது என்பதால் முன்தேதியிட்டு பிடித்தம் செய்வது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • BSNL ஊழியர்களுக்கு அரசியல் தொடர்பு கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மாற்றுவது பற்றி DPE வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.

நேரமின்மை காரணமாக பல பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. 
விரைவில் அடுத்த தேசியக்குழுக்கூட்டம் நடத்தப்படும் 
எனவும்... அதில் ஏனைய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் 
எனவும் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர் பிரச்சினைகளை அமைதி வழியில்  பேசித்தீர்க்கும் களமான JCMன் முக்கியத்துவம் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது. தலைமை மட்டத்திலேயே ஓராண்டு கழித்து கூட்டங்கள் நடக்குமானால் தலமட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  
தீர்வுகளுக்காக காத்துக்கிடக்கும் பாதிக்கப்பட்ட 
BSNL ஊழியர்கள் பாவப்பட்டவர்களே….

No comments:

Post a Comment