ஜனவரி 6
தோழர்.குப்தா
புத்தனுக்குப்பின் அன்பில்லை...
பார்த்தனுக்குப்பின் அம்பில்லை..
கர்ணனுக்குப்பின் கொடையில்லை..
கம்பனுக்குப்பின் கவிதையில்லை..
தொழிற்சங்க உலகிலே...
குப்தாவுக்கு எவரும் இணையில்லை...
சிறியோரை மேம்படுத்தினான்
வலியோரை வசப்படுத்தினான்...
அவையத்து நம்மை முந்த வைத்தான்
நம் அவயத்துள் என்றும் குடி கொண்டான்...
தனிவழி தவிர்த்தான்..
பொதுவழி படைத்தான்...
அவன் சொன்ன வழியில் ஒன்றுபட்டு நின்று..
அதிகாரி தொழிலாளி கைகோர்த்து இன்று...
அவன் சொன்ன பொதுவழி அல்லால்..
அல்லல் தீர புதுவழி ஏதுமில்லை இங்கு...
சிந்தனையில் சீர்மிகு சிற்பியவன்...
சிலையாகி விட்டான்..இன்று..
சிறியன நாட்டில் நடப்பது கண்டு...
தன்னந்தனி தனிவழி தவிர்ப்போம்...
இணைந்து செல்லும் பொதுவழி புகுவோம்....
இன்னல் தீர்க்கும் பொதுமை வழி கொள்வோம்...
அதுவே..
அவனுக்கு நாம் செய்யும்..
ஆகப்பெரும் அஞ்சலி..
No comments:
Post a Comment