செய்திகள்
- கனரா வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 22/01/2016 வரை அமுலில் இருக்கும். தற்போதைய தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.
- 01/10/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து அதன் பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் DOT ஊழியராக சில இடங்களில் கருதப்படவில்லை. அத்தகைய தோழர்களை DOTயில் இருந்து BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்கள் என்னும் நிலைக்கு அங்கீகரிக்க வேண்டும் என JCM தேசியக்குழுவில் பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது இது குறித்து டெல்லி நிர்வாகம் தேவையான விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
- BSNL விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் வைப்பதற்கான உறை KIT MONEY வாங்குவதற்கான தொகை ரூ.2000/=ல் இருந்து 2500/= ஆகவும், நாடுகளுக்கிடையேயான போட்டியாளர்களுக்கு ரூ.2500/= லிருந்து ரூ.3000/=மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- JCM தேசியக்குழு நிலைக்குழு STANDING COMMITTEE கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NFTE சார்பாக தோழர்கள்.இஸ்லாம் அகமது,சந்தேஷ்வர்சிங் மற்றும் BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, ஸ்வபன் சக்கரவர்த்தி, பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
- IQ ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.40/=ம் ஏனைய ஊர்களில் ரூ.25/=ம், சொந்தப்பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.150/=ம் ஏனைய ஊர்களில் ரூ.75/=ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment