செய்திகள்
GPF நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்கு வந்து விட்டதாக
செய்திகள் கூறுகின்றன. ஆயினும் பொங்கலுக்குப் பின்தான்
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இது வரிசையான விடுமுறை காலம்.
எனவே இந்த வாரம் கைக்கெட்டினாலும்
வாய்க்கெட்டும் வாய்ப்பில்லை.
சரிதான்... உலைக்கு வந்தது... இலைக்கு வராமலா போகும்...
=====================================================
BSNL தனியாருக்குத்தாரை வார்க்கப்படாது...
BSNL மற்றும் MTNL இணைப்பு கிடையாது.. என்று
நமது துறை அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில்
நம்பிக்கை நடை என்னும் நடைப்பயண
துவக்க நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
நடையாய் நடந்தாலும்
நாம் மந்திரிகளை சந்திக்க முடிவதில்லை.
நடைப்பயண நிகழ்ச்சியிலாவது
நமது நினைப்பு அவருக்கு வந்ததே என
நாம் ஆறுதல் கொள்ளலாம்.
நடக்கிற நிகழ்ச்சியில் சொன்ன விஷயம்
நடக்கிற விஷயமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
=====================================================
சம்பளப்பட்டுவாடாவில் ERPயினால் ஏற்பட்டுள்ள
இம்சைகளைக் களையக்கோரி மாவட்ட கணக்கு அதிகாரிகளுக்கு
மாநில நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
======================================================
நாம் நினைத்தது போலவே
பெயர் மாற்றக்குழுக்கூட்டம் DESIGNATION COMMITTEE
எந்த கேடருக்கும் பெயர் மாற்றாக்குழுக்
கூட்டமாகவே முடிவடைந்துள்ளது.
=======================================================
கருணை அடிப்படை பணிக்கான உத்திரவுகளை டெல்லி தலைமையகத்தின் அனுமதி இல்லாமல் பிறப்பிக்க கூடாது என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
31/01/2015 வரை பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை 07/02/2015குள் அனுப்பிட மாநில நிர்வாகங்களை
CORPORATE அலுவலகம்கேட்டுக்கொண்டுள்ளது.
========================================================
No comments:
Post a Comment