செய்திகள்
ERP மூலம் போடப்பட்ட சம்பளப்பட்டுவாடாவில்
நிகழ்ந்த குளறுபடிகளை மாநில நிர்வாகத்திடம்
மாநிலச்சங்கம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில்,
மாநில நிர்வாகம் 02/01/2015 அன்று
மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி மாவட்ட மட்டத்தில் சரி செய்யப்பட
வேண்டிய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட
AO(DRAWL) கணக்கு அதிகாரி
தீர்த்து வைக்க வேண்டுமெனவும்,
மாநில மட்டத்தில் தீர்க்க வேண்டிய
பிரச்சினைகளை மாநில நிர்வாகத்தின்
கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமெனவும்
PGM FINANCE அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகள் தீருமென நம்புவோம்.
==============================================================
போன் மெக்கானிக் தேர்வு எழுதி
தேர்ச்சியுற்ற 42 தோழர்களுக்கு
4 வார TM பயிற்சி வகுப்பு 19/01/2015 அன்று
சென்னையில் துவங்குகின்றது.
===============================================================
போன்மெக்கானிக் தேர்வு எழுதி தோல்வியுற்ற
SC/ST தோழர்களின் தேர்வு முடிவை பரிசீலிப்பது பற்றி
டெல்லி தலைமையகம் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை
02/01/2015 அன்று வெளியிட்டுள்ளது.
- ஒரு தேர்வில் SCST காலியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டால், அதன்பின் தோல்வியுற்றவர்களின் தேர்வு முடிவுகளை பரிசீலிக்க அவசியமில்லை.
- குறைந்த பட்ச 20 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்றவர்களின் முடிவுகளை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.
- தேர்வு முடிவுகள் வெளிவந்த 3 மாதங்களுக்குள் முடிவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
- பரிசீலனையில் தேர்ச்சி பெற்ற SC/ST தோழர்கள் சேவைப் பட்டியலில் எல்லோருக்கும் இளையவராக கருத்தப்படுவர்.
- இது வருங்கால தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த இளம் TTA தோழர்களின்
சம்பள நிர்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடியால்
அவர்களுக்கு சம்பள இழப்பு உண்டானது. மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினை பேசப்பட்டு வந்தது. தற்போது இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அந்த தோழர்களுக்கு 2007 முதல் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை கூடுதலாக அளித்து உரிய நிலுவையும் அளித்திட
BSNL நிர்வாகக்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக
நமது மத்திய சங்கம் கூறியுள்ளது.
==============================================================
30/12/2014 அன்று தோழர்.இஸ்லாம் தலைமையில்
நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில்
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும்,
ஜனவரி 6/7/8 நாடு தழுவிய தர்ணாவையும்,
பாராளுமன்றம் நோக்கிய பேரணியையும்
திறம்பட நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில்
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும்,
ஜனவரி 6/7/8 நாடு தழுவிய தர்ணாவையும்,
பாராளுமன்றம் நோக்கிய பேரணியையும்
திறம்பட நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
===============================================================
No comments:
Post a Comment