கைப்பு நிதியான வைப்பு நிதி..
வராது...ஆனாலும்....வரும்..
வைப்புநிதி...
அன்று... மாதம் மும்மாரி பெய்தது...
இன்று...மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது பெய்யாதா?
என BSNL பெரு மக்களை பெருமூச்சு விட வைத்து விட்டது...
பக்திக்கும்..,பனிக்கும் உகந்த மார்கழியிலே..
எல்லாம் வல்ல இறைவனை...
எழுப்பி நம் தோழர்கள்...
எல்லாம் தொல்லை ERPன் இம்சை தீர துதிக்கின்றனர்...
வைப்பு நிதி வேண்டி சிலர்....
இரு முடி கட்டினார்கள்.. எருமேலி சென்றார்கள்..
இரண்டு மாதமாகியும் ஏதும் கதை நடக்கவில்லை...
திருப்பதி சென்றார்கள்.. திரும்பி வந்தார்கள்...
திருப்பம் எதுவும் நேரவில்லை...
பாத யாத்திரை சென்றார்கள்..பல நாள் நடந்தார்கள்..
பலன் ஏதும் இல்லாமல் பரிதவித்தார்கள்...
மாநிலச்சங்கங்கள்
முதன்மைப்பொது மேலாளரிடம் முறையிட்டு விட்டன..
அகில இந்தியச்சங்கங்கள்...
CMDயிடம் சிரமங்களைச் சொல்லி விட்டன..
இனி மிச்சமிருப்பது ஐநா சபை மட்டுமே...
வைப்பு நிதி...
மூன்று மதங்களையும் முட்டிப்பார்த்த ஒரே மதம் (தாமதம்)...
கிறிஸ்துவர்களை தவிக்க விட்டது...
புத்தாண்டுப் பிரியர்களை புலம்ப விட்டது..
மீலாது விழாவிலும்..மீளாது நின்று விட்டது...
இனி... சங்கத்தமிழன்... மட்டுமே பாக்கி...
ஜனவரி 15...
பானைகள் பொங்குமோ?
பாழும் மனசுகள்.. பொங்குமோ?
தைப்பிறந்தால் வழி பிறக்கும்... என்பது பழமொழி..
தைக்கு முன்னே வைப்பு நிதி பிறக்குமா?
என்பதே நமது தோழர்களின் கவலை மொழி...
நாளைக்குள் பிறந்தால் நன்று...
இல்லையேல்...
வைப்பு நிதி... தொழிலாளியின்
கைப்பு நிதியாகிவிடும்...
No comments:
Post a Comment