Tuesday, 26 April 2016

குழந்தைப் பராமரிப்பு விடுப்பும்... 
குழந்தைத்தனமான கேள்வியும்...


மத்திய அரசில் பெண் ஊழியர்களுக்கான 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 
01/09/2008 முதல் அமுல்படுத்தப்பட்டது.

மேற்கண்ட குழந்தைப்பராமரிப்பு விடுப்பை 
உடனடியாக BSNLலில் அமுல்படுத்த 
வழக்கம் போலவே BSNLEU சங்கம் தவறியது.
ஜனவரி 2010ல் ஊதிய உடன்பாடு போடும்போது கூட 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்த 
BSNLEUவால் இயலவில்லை.
நிர்வாகம் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை 
அமுல்படுத்த மறுத்து வந்தது.

நமது சங்கத்திற்கு அங்கீகாரம் இல்லாத நிலையிலும்
 குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்தக்கோரி 
நிர்வாகத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில்.. 78.2 சத IDA இணைப்பை வலியுறுத்தி 
அனைத்து சங்க கூட்டுக்குழுவின் சார்பாக  
13/06/2012 முதல் காலவரையற்ற 
வேலைநிறுத்த  அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

ஏனைய கோரிக்கைகளோடு 
குழந்தை பராமரிப்பு விடுப்பு கோரிக்கையும் 
அனைத்து சங்கங்களால் இணைக்கப்பட்டது. 
12/06/2012 அன்று நிர்வாகத்திற்கும் 
அனைத்து சங்கங்களுக்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அமுல்படுத்துவது பற்றி  மீண்டும்  
BSNL வாரியக்கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 
மறுபரிசீலனை செய்யப்படும் என கையெழுத்தானது.

உடன்பாடு கையெழுத்து ஆன போதிலும் 
நிர்வாகம் தொடர்ந்து இப்பிரச்சினையை இழுத்தடித்து வந்தது.
மீண்டும் அனைத்து சங்க ஊழியர் அமைப்பு
 12/06/2012 உடன்பாட்டு அம்சங்களை அமுல்படுத்திட வேண்டும் என்று நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில்..
5 ஆண்டுகளாக BSNLEUவால் தீர்க்க இயலாத 
 குழந்தைப் பராமரிப்பு விடுப்பை 
BSNLலில் அமுல்படுத்தி 08/03/2013 
அன்று நிர்வாகம்  உத்திரவிட்டது.
அந்த உத்திரவிலும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. 

25/04/2013 முதல் NFTE சங்கத்திற்கு 
இரண்டாவது சங்க அங்கீகாரம் வந்த பின்பு 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பில் நிர்வாகம் விதித்திருந்த 
தேவையற்ற குழப்பங்களை ஒவ்வொன்றாய் சரி செய்தோம்.

நிலைமை இவ்வாறிருக்க..

என்று BSNLEU  கோவைத் தோழர்கள் 
NFTE ஐப்பார்த்து  கேலி செய்து 
கோ(வை)யபல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேள்விகள் கேட்பது BSNLEUவின் வழக்கம்தான்...
நாமும் அவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

01/09/2008 முதல் மத்திய அரசில் 
குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 
அமுல்படுத்தப்பட்ட நிலையில்..

BSNLலில் 01/09/2008 முதல்  07/03/2013 வரை 
ஏறத்தாழ  5 ஆண்டுகள் பெண் ஊழியர்களை 
குழந்தை பராமரிப்பு விடுப்பை அனுபவிக்க விடாமல் 
தவிக்க விட்டது ஏன்? தாமதம் செய்தது ஏன்?
தடுத்தது யார்?  கெடுத்தது யார்?
மார்க்சிய எதிரி.. மம்தா பானர்ஜியா?

No comments:

Post a Comment