புழுதி வாரிகள்...
பொய்களைப் புனைவதிலும்
புழுதிவாரித் தூற்றுவதிலும்
BSNLEU சங்கத்திற்கு
ஈடு இணை இவ்வுலகில் இல்லை.
தூற்றிய புழுதிகள் காற்றிலே கலந்தால்
கண்களும் கலங்கி விடும்...
சுவாசமும் தொலைந்து விடும்...
எண்ணற்ற புழுதிகளில் ஒன்றுதான்..
BSNL நிறுவனத்தை NFTE உருவாக்கியது
என்ற பதினாறு வருட பழம்புழுதி...
இப்போது பழம்புழுதி மீண்டும் கிளம்பியுள்ளது...
இது தேவைக்கான புழுதி...
தேர்தலுக்கான புழுதி...
BSNL உருவாக்கம் என்பது அன்றைய
BJP அரசின் கொள்கை முடிவு...
CPM தலைவர் தோழர்.சோம்நாத் சாட்டர்ஜியைத்
தலைவராகக் கொண்ட பாராளுமன்றக்குழு
BSNL உருவாக்கத்திற்கு பரிந்துரை செய்தது.
ஆனால்..
NFTE மட்டும்தான் FNTO மற்றும் BTEF துணையுடன்
3 நாட்கள் கடும் போராட்டக் களம் கண்டது..
இறுதியில் ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு,
இருக்கும் சலுகைகள் தொடர்வு...
என அனைத்தையும் NFTE உறுதி செய்தது...
இன்று வரை தோழர்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் புழுதிவாரிகளோ...
தொடர்ந்து புழுதியை
வாரிக்கொண்டிருக்கின்றனர்..
BSNL உருவாக்கத்தை எதிர்த்தோம் என்று சொன்னவர்கள்
3 நாட்கள் போராட்டத்தில் ஒதுங்கி நின்றவர்கள்...
BSNL உருவாக்க விழாவில் முன்வரிசையில்...
வாயில் இனிப்பும்..மனதில் களிப்புமாக..
கலந்து கொண்டு சுகம் கண்டனர்....
விசாகப்பட்டினத்தில் விரைந்து கூடி ...
BSNLEU என BSNL பெயர் தாங்கிய சங்கம் கண்டனர்...
பதினோரு ஆண்டுகள்...
ஆலகால அங்கீகாரம் அடைந்தனர்..
இவர்களது காலத்தில்தான்
2012ல் BBNL என்றொரு துணை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது?
ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை?
காரணம் இவர்களின் துணையோடுதான்
BBNL துணை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்து...
செல் கோபுரங்களைப் பிரித்து
துணை நிறுவனம் ஆரம்பிக்க
அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது...
அதுவும் இவர்களின் இசைவோடுதான் நடந்தது..
அதனால்தான் இவர்களிடம் அசைவு ஏதுமில்லை...
இதையெல்லாம்
மறந்து விட்டு... மறைத்து விட்டு..
NFTE சங்கத்தால்தான் BSNL உருவானது...
ஊழியர் வாழ்வு நாசமானது...என்று
பழைய... புழுதியை தொடர்ந்து தூற்றுவது...
கொண்ட கொள்கைக்கும்...
ஏந்திய கொடிக்கும் ஏற்குமா?
புழுதிவாரிகள் சிந்திப்பார்களா?
புழுதிவாரிகள் திருந்தாவிட்டாலும்...
புழுதிகள் குறையாவிட்டாலும்...
NFTE என்றும் ஊழியர் பணி செய்யும்...
தன் கடன் முடிக்கும்..
No comments:
Post a Comment