Thursday, 21 April 2016

கருணை அடிப்படை 
பணி நியமன விதிகள் தளர்வு 

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளைத் தளர்த்தி 
BSNL நிர்வாகம் 21/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 
விதிகளைத் தளர்த்தியதாக நிர்வாகம்  கூறினாலும்
 ஓரிரண்டைத் தவிர பழைய முறையே தொடர்கிறது.

  • புதிய விதிமுறைகள் 01/04/2016 முதல் அமுலுக்கு வரும்.
  • ஊழியர் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 55 மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விதவைகள் விண்ணப்பித்தால் 15 மதிப்பெண் வழங்கும் முறை தொடர்கிறது.
  • மாத வருமானம் ரூ.1000/=க்கு மேல் உள்ளவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். அதிகபட்ச எதிர்மறை மதிப்பெண் 5 ஆகும்.
  • வாடகை வீட்டில் இருந்தால் 5 மதிப்பெண். சொந்த வீட்டில் இருந்தால் மதிப்பெண் கிடையாது. 
  • வெளி ஆளெடுப்பில் 5 சத காலியிடங்களே  நிரப்பப்படும்.
கருணை அடிப்படை பணி நியமனத்தில் 
குறிப்பிடத்தக்க தளர்வுகள் ஏதுமில்லை என்பதே இன்றைய நிலை.
எனவே சாதனைப் பட்டியலில் இவை இடம் பெற வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment