Thursday 7 April 2016

இணையில்லா... இமயம் 
தோழர்.குப்தா 
உயர்ந்தவன்...
ஓடப்பர்களை  உயர வைத்தவன்...

நிமிர்ந்தவன்...
தாழ்வுற்றவர்களை  தலை நிமிர வைத்தவன்...

மாசற்றவன்...
கையிலும்.. மனதிலும்.. காசற்றவன்...

பணிவானவன்..
கரி பூசிய கரங்களிடமும் கனிவானவன்...

உப்பிட்டவன்...
உயரத்தில் நம்மை உயர்த்திட்டவன்...

திசைகாட்டியவன்...
திக்கற்ற மனிதருக்கு திசைகாட்டி அவன்.. 

வழிகாட்டியவன்..
வழியறியா மனிதருக்கு  வழிகாட்டி அவன்...
  
அவன் வழி செல்வோம்...
அவன் புகழ் பாடுவோம்...

அவன் வளர்த்த இயக்கம் 
அவையத்து முந்தியிருக்க..
அரும்பணி செய்திடுவோம்...

=======================================================================
தோழர்.குப்தா 
பிறந்த நாள் சிறப்புக்கூட்டம் 

08/04/2016 - வெள்ளிக்கிழமை - மாலை 5 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.

- : சிறப்புரை :- 
பங்கு கொள்வோர்  அனைவரும்...

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment