செய்திகள்
2007ம் ஆண்டு TTA ஆளெடுப்பில்
பணி நியமனம் பெற்ற அனைவரையும்
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டிற்கான TTA காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும், பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும்
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
===============================================
விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================
BSNL அதிகாரிகளுக்கான
POST PAID செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...
A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...
இலவசமாகப் பேசிக்கொள்ளலாம்.
அனைத்து அதிகாரிகளுக்கும் STD வசதியும்...
தேசம் முழுவதும் இலவசமாக ஊர்சுற்றும் ROAMING வசதியும் உண்டு...
===============================================
தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும் மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA - மாவட்டங்களை
10 வணிகப்பகுதிகளாக BUSINESS AREAவாக மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின் கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெறலாம்.
Very happy to see eligible of 2007 recruitment TTA's.but it is very saden and irritating to see our own community of TTA's-SNATTA openly opposing our 2008 post july TTA's.whether they don't want us? One side opposing and other side says it's our victory that allowed all 2007 TTA's to eligible.they not only opposing,but also provoking TTA's to lodge cases..really shame...
ReplyDelete