Tuesday, 19 April 2016


அடையாள மை 

தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் 
BSNL உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் வாக்களிக்கும் ஊழியர்களுக்கு அடையாள மை அவர்களது இடது கை நடு விரலில் வைக்கப்படும். நடுவிரல் இல்லாதவர்களுக்கு பெருவிரலில்
 அடையாள மை வைக்கப்படும்.
===============================================
மாதிரி வாக்குச்சீட்டு 

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் ஏதுமிருந்தால் 
சங்கங்கள் 21/04/2016க்குள் தெரிவிக்க வேண்டும்.
===============================================
TTA  - மாவட்ட அளவிலான பதவி 

 25/08/2014 முதல் TTA  பதவி  மாநிலம் தழுவிய பதவியாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. 2012ம் ஆண்டிற்கான காலியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் 25/08/2014க்குப்பின் பணியமர்த்தப்பட்ட 
TTA  தோழர்களின் பதவி  மாவட்ட அளவிலான  பதவியாகவே கருதப்படும் என BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது. 
===============================================
நாலுகட்டம் - தொடரும் விளக்கங்கள்

BSNLEU  சங்கத்தின் அரிய கண்டுபிடிப்பான நாலுகட்டப்பதவி உயர்வில் BSNL நிர்வாகம் மேலும் சில விளக்கங்களை அளித்துள்ளது. 

குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு நாலுகட்டப்பதவி உயர்வுக்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  உயர் படிப்பிற்காக எடுக்கப்பட்ட சம்பளமற்ற விடுப்பு EOL கணக்கில் கொள்ளப்படும். 

மற்ற EOL விடுப்புகள் பதவி உயர்வுக்கு கணக்கில் வராது 
என  நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

மேற்கண்ட விளக்கம் 147வது விளக்கம் என்று அறியப்படுகிறது.  
மேலும் இது அனுமார் வால் போல் நீளும் என்றும் நம்பப்படுகிறது.
===============================================
JTO  இலாக்காத்தேர்வு 

சென்ற JTO  இலாக்காத்தேர்வில் தவறுதலான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் தவறுதலானவை என்று நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டாலும் கூட அதற்கான 
தீர்வு நிர்வாகத்தால் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் எதிர் வரும் JTO தேர்வுகளில்...

  1. பாடத்திட்டங்களின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படவேண்டும்.
  2. கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும்.
  3. SC/ST  தோழர்களுக்கு தேர்வெழுத உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment