Friday 15 April 2016

ஒண்ணுமே... புரியலே...

22/05/2016 நடைபெறவுள்ள JTO தேர்வுக்கு 
2007ம் ஆண்டு TTAக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்...
தற்காலிகமாக அனுமதி உண்டு...
விண்ணப்பங்களை ONLINE மூலம் 15/04/2016 முதல் பதிவேற்றலாம்..
என்ற செய்தி எங்களைப் போன்ற TTAகளுக்கு மகிழ்ச்சிதான்...
இந்த அரிய சாதனை.. 
5 முறை அங்கீகார சங்கத்தின் 
ACHIEVED வரிசையிலும் வந்து விட்டது... 

நாங்களும் ஆர்வத்தோடு ONLINEல் விண்ணப்பிக்கச் சென்றால்...
ONLINE...இன்னும் ON ஆகவில்லை... OFFLINE ஆகவே உள்ளது...
   
விண்ணப்பத்தில் முன்னே என்ன இருந்ததோ... 
அது அப்படியே இருக்கிறது...
யாரும் விண்ணப்பிக்க முடியவில்லை....
பயிற்சிக்காலம் பற்றிய விவரங்களைக் கொடுக்க முடியவில்லை...
புது இணையதளத்தையே...
அரை  மணி நேரத்தில் ஆரம்பித்து விடலாம்....
இங்கு நாட்காட்டி மாற்றமோ நாள் கணக்காக ஆகின்றது...

எளிய பணிகள்தான்...
ஆனாலும் தொடர்ந்து ஏமாற்றுவதாகவே தெரிகிறது....

இலாக்கா தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம்  500 ரூபாயாம்...
சென்னைக்கு போய் தேர்வு எழுத வேண்டுமாம்...
அரசு நிறுவன ஊழியர்களுக்கு..
தனியார் நிறுவனம் தேர்வு நடத்துமாம்...
என்ன ஒரு அரிய சாதனை?

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 22...
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படாமலேயே 
பதிவு செய்த அனைத்து தோழர்களுக்கும் 
குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

23,24,25 தேதிகளில் மாற்றம் செய்யலாம் 
என்றும் தகவல் வந்துள்ளது....
நாங்கள் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கக் கூடாதா
கட்டணம் எவ்வாறு செலுத்துவது
பழைய விண்ணப்பத்தில்...
எந்த வகையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது
JTO EXAM  நடக்குமா?  நடக்காதா
நம்பலாமா? நம்பக்கூடாதா?
யாரைப்போய் கேட்பது?

எல்லா பக்கமும் சுவர் இருக்கு...
எந்தப் பக்கம் முட்டலாம் என்று தான் தெரியவில்லை..
எந்த துறையிலும் இல்லாத சாதனை BSNL-ல் மட்டும்... 
இதில் 5 முறை அரிய சாதனையாளர்களின் பங்கு என்ன
எங்களுக்கான தனிச்சங்கத்தின் நிலை என்ன?
நிர்வாகம் என்ன நினைக்கிறது
என்ன நடக்குதுனு...
யாருக்கும்.. புரியவில்லை...தெரியவில்லை...

எல்லோரும்  நீதிமன்றம் தான் போகவேண்டுமா?
நீதிமன்றங்களில் இருந்து மேலும் குழப்பங்கள் வருமா?
தடைகள் அகலுமா? தொடருமா?

நடக்கப்போவது.. 
JTO பரீட்சையா? விஷப்பரிட்சையா?
இவையெல்லாம்...
SOFTWAREகள் குழப்பமா?
சட்ட வல்லுநர்கள் குழப்பமா?
சாதனையாளர்கள் குழப்பமா?

ஒண்ணுமே... புரியலே...

குழப்பத்துடன்...
பொறியில் சிக்கிய பொறியியல் பட்டதாரி...
கா. தமிழ்மாறன்...2007ம் ஆண்டு TTA 
காரைக்குடி.

No comments:

Post a Comment