அனுபவம் பேசுகிறது...
நான் ... காந்திமதி வெங்கடேசன்
இன்று 30/04/2016 பணி ஓய்வு பெறுகிறேன்.
எனது கணவர் தோழர். வெங்கடேசன்
நேர்மையும் நியாயமும் நிறைந்த தொழிற்சங்கத் தலைவர்.
குப்தா, ஜெகன், முத்தியாலு , ஆர்.கே., மாலி, தமிழ்மணி, பட்டாபி
என நான் கண்ட தலைவர்கள்
போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.
நான் தொலைபேசி இயக்குனராக பணியமர்ந்தேன்.
இன்று ஒரு எழுத்தராகப் பணி நிறைவு பெறுகிறேன்.
TRUNK தொலைபேசி மூடப்பட்டது.
ஆனால் ஒருவரைக்கூட பணி இழப்புக்கு ஆளாக்காமல்
அனைவரையும் எழுத்தர் பணி செய்ய வைத்து
இன்று மத்திய அரசு ஓய்வூதியமும் பெற வைத்த
NFTE சங்கத்தையும்...
அதன் பெருமைக்குரிய தலைவர்களையும்
நான் மனதார நினைத்துப் பார்க்கிறேன்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க 2000 போராட்டத்தில்
நான் கலந்து கொண்டவள் என்ற பெருமை எனக்குண்டு.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கழன்று போனது
அன்றைய நம்பூதிரி சங்கம் என்ற
இன்றைய BSNLEU சங்கம்.
ஆனால் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள்தான் ஓய்வூதியத்திற்குப் பாடுபட்டதாக கூறியதைக் கேட்டதும்
அடக்க முடியாத சிரிப்புத்தான் எனக்கு வந்தது.
பொய் சொல்பவர்களைப் பார்த்து...
எனது கணவர் "நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்" என்ற
அவ்வையின் மொழியை கூறுவார்.
அதையேதான் நமது BSNLEU தலைவர்களுக்கும் எனது பணிநிறைவுச் செய்தியாக கூற விரும்புகிறேன்.
எனது பணிக்காலம் முழுமையும்
என்னுடன் பயணித்த NFTE சங்கத்தை மீண்டும்
பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
NFTE இயக்கத்தின் மாவட்டத்தலைவர் .
இன்று 30/04/2016 எனக்குப் பணி நிறைவு.
மன நிறைவுடன் பணி நிறைவு பெறுகிறேன்.
ஒடுக்கப்பட்ட பகுதியில் பிறந்தேன்.
உணர்வும் உரிமையும் நிறைந்த மனிதனாக ஓய்வு பெறுகிறேன்.
நான் தலை நிமிர்ந்து வாழ காரணமான
NFTE இயக்கத்தையும்...
அதன் தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
எளிமையை உண்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்த
அவர்களை வணங்குகிறேன்.
மன நிறைவோடு பணி நிறைவு செய்யும்
எனக்கு மனக்குறையும் உண்டு.
இந்த தேர்தலில் இணைந்த கரங்களுக்கு
வாக்களிக்க இயலவில்லையே என்பதுதான் அது.
அதோடு...
என் பதவியின் பெயர் கண்காணிப்பாளர்
SUPERINTENDENT என மாறும் என எதிர்பார்த்திருந்தேன்.
ஏமாற்றம்தான் மிச்சம்...
25 வருடங்களாக இடைவிடாமல்
போனஸ் பெற்றிருந்தேன்..
இவர்கள் காலத்தில் போனஸ் பறிபோனது..
இறுதியாக இந்தாண்டு கிடைக்கும் என நம்பியிருந்தேன்...
ஏமாற்றம்தான் மிச்சம்...
கடந்த காலங்களில் ஏமாற்றங்கள்தானே ஊழியருக்கு அனுபவம்..
2008ல் அமைக்கப்பட்ட DESIGNATION COMMITTEEஐ உறங்க விட்டது யார்?
போனஸ் கமிட்டியில் கலந்து கொள்ளாமல்
ஊழியருக்குத் துரோகம் இழைத்தது யார்?
இந்த ஏமாற்றங்களுக்கு யார் காரணம்...
சொல்லாமல் தெரியும்...
ஏமாற்றங்களின் நாயகன்..
ஏமாற்றுவதில் சாம்பியன் BSNLEU என்பது...
ஒன்றா.. இரண்டா...
நவீன மயத்தை எதிர்த்தார்கள்...
கேடர் சீரமைப்பை எதிர்த்தார்கள்...
பதவி உயர்வை எதிர்த்தார்கள்...
போனஸ் என்பதை எதிர்த்தார்கள்..
மிகுதி நேரப்படியை எதிர்த்தார்கள்..
பொதுத்துறையை எதிர்த்தார்கள்...
நல்லவற்றை எல்லாம் எதிர்த்து.. எதிர்த்து
நம் வாழ்வின் முன்னேறத்தைப் பாழ்படுத்தினார்கள்...
இன்றோ...
அதைச் செய்தோம்...
இதைச்செய்தோம் என்று
வெற்று வாய்ச்சவடால் விடுகின்றனர்.
NFTE இயக்கம் போராடி
உருவாக்கிய உரிமைகளால்தான்
எங்களைப் போன்ற மூத்த தோழர்கள்
இன்று நிறைவோடு பணி நிறைவு பெறுகிறோம்..
மிச்சமிருக்கும் ஊழியர்களும்..
அச்சமின்றி பணி நிறைவு பெற வேண்டுமெனில்...
இணைந்த கரங்கள் உயர வேண்டும்...
இறுமாப்புக்கள் அகல வேண்டும்...
இதுவே எனது பணிநிறைவு நாள் ஆசை...
எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள் பட்டாபி
ReplyDelete