புறந்தள்ளுவோம்
SC/ST ஊழியர்களுக்கு நாலுகட்டப் பதவி உயர்வில் சலுகை பெற கடுமையான முயற்சிகள் மேற்கொள்வோம். பதவி உயர்வு பெறுவதற்கான சேவைக்காலத்தை குறைப்பதற்கு முழு மூச்சுடன் செயல்படுவோம்.
SEWA-BSNL சங்கப்பொறுப்பாளர்களுக்கு மாற்றலில் விதிவிலக்கு IMMUNITY FROM TRANSFER பெற பாடுபடுவோம்.
பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள SC/ST காலியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வோம்...
BSNLலில் நிரந்தரம் பெறாமல் இன்னும் TSM மற்றும் CASUAL LABOUR ஆகப்பணி செய்து வருவோருக்கு உடனடியாகப்பணி நிரந்தரம் வழங்கப் பாடுபடுவோம்.
நடந்து முடிந்த இலாக்கப் போட்டித்தேர்வுகளில் தோல்வியுற்ற SC/ST தோழர்களுக்கு அவர்களது தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நிர்வாகத்தை மிகக்கடுமையாக வலியுறுத்துவோம்.
SC/ST தோழர்களின் குறைகளைத் தீர்க்கும் முதன்மைத் தொடர்பு அதிகாரியாக CHIEF LIAISON OFFICER பொது மேலாளர்களை நியமனம் செய்ய கடும் நடவடிக்கைகள் எடுப்போம்.
தோழர்களே...
மேலே கண்ட உடன்பாடும்.. உத்திரவாதமும்..
NFTE சங்கத்திற்கும் SEWA சங்கத்திற்கும்
இடையே ஏற்பட்டதல்ல...
சென்ற 6வது சரிபார்ப்புத்தேர்தலில்
BSNLEU சங்கத்திற்கும்
SEWA BSNLக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்த வரிகள்...
இவற்றில் ஒன்றாவது நடைமுறைக்கு வந்துள்ளதா?
என BSNLEU சங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்..
அரசியல் வாதிகளை விட மலிவாக
ஊழியருக்கு வாக்குறுதிகளை அளிப்பதும்..
அங்கீகாரம் பெற்ற பின்
அகங்காரத்துடன் நடப்பதும்...
வாக்குறுதிகளைக்காற்றில் பறக்க விடுவதும்...
BSNLEU சங்கத்தின் இயற்கைக் குணமாகும்...
அதன் குணம் அறிந்து தெரிந்த பின்தான்
SEWA மற்றும் TEPU சங்கங்கள்
BSNLEUவை விட்டு விலகியுள்ளன...
போலி வாக்குறுதியாளர்களை...
பொய்யுரைக்கும் புரட்டர்களை...
மே.. 10ல் புறந்தள்ளுவோம்...
No comments:
Post a Comment