Sunday, 3 April 2016

அஞ்சு கட்டமும்... அசிங்கக் கட்டமும் 


BSNL  ஊழியர்களுக்கு 
5 கட்டப்பதவி உயர்வு பெற்றுத்தந்ததாகவும்...
அதில் SC /ST ஊழியர்களுக்கு 
அரசியல் அமைப்புச்சட்டத்தில் வழங்கியுள்ள 
பாதுகாப்புகளை உத்தரவாதப்படுத்தியதாகவும் 
பெருமை அடித்து BSNLEU சங்கம் போஸ்டர் அடித்துள்ளது..

மேலே கண்ட போஸ்டரைப் படித்தவுடன் 
நமது தோழர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...
நாலு கட்டமே நாறிப்போன நிலையில்...
அஞ்சாம் கட்டம் எங்கே வந்தது?
SC /ST ஊழியர்களுக்கு ஏது கூடுதல் சலுகை?
அது என்ன? அரசியல் அமைப்புச் சட்டப்பாதுகாப்பு?
பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்ல வேண்டாமா?

நமது மாவட்டத்தலைவர் தோழர்.சுந்தர்ராஜன்..
NFTE  காலத்தில்...
தோழர்.குப்தா உருவாக்கிய OTBP/BCR பதவி உயர்வுகளில் 
SC/ST  தோழர்களுக்கான சலுகையைப் பெற்றார்...
ஆனால் BSNLEU காலத்தில்... 
SC/ST  தோழர்களுக்கான எந்த சலுகையும் அடையாமல்...
அண்ணல் அம்பேத்கார் பிறந்த ஏப்ரல் மாதத்தில்...
ஏமாற்றத்துடன்  பணி நிறைவு பெறுகின்றார்...

SC/ST  தோழர்கள் தொடர்ந்து 
BSNLEU  சங்கத்தால் வஞ்சிக்கப்பட்டதால்தான் 
SC/ST  ஊழியர்கள் நல அமைப்பு... இனிமேல்...
BSNLEU சங்கத்தோடு எந்த சங்காத்தமும்  வேண்டாம் 
என்று உறுதிபட  முடிவு செய்துள்ளது.

தோழர். சுந்தர்ராஜன் போலவே 
பல மூத்த தோழர்கள் மாதந்தோறும் பணி நிறைவு பெறுகின்றனர்...

இராமநாதபுரம் கிளைத்தலைவர் தோழர்.ஜெயபாலன் 
வரும் ஜூன் மாதம்  பணி நிறைவு பெறுகிறார்...
அவர் 2000க்குப்பின் BCR பதவி உயர்வு பெற்றார்...
அதன் பின் ஒரேயொரு நாலுகட்டப்பதவி உயர்வு பெற்றார்...
தற்போது அடுத்த நாலுகட்டத்தை அடைவதற்கு 
இரண்டு மாதங்கள் முன்பு  பணி நிறைவு பெறுகின்றார்...
ஏழு வருடங்கள் 10 மாதங்கள் பணி புரிந்தும்...
எட்டு வருடத்தை அடையாததால்... 
நாலு கட்டம் இல்லாமலே  பணி நிறைவு பெறுகிறார்...
எனவேதான் தோழர்.குப்தா இது போன்ற தோழர்களுக்காக...
ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பாக 
ஒரு ஆண்டு உயர்வுத்தொகை கூடுதலாக வழங்கிட வகை செய்தார்...
இன்றைய நாலுகட்டப்பதவி உயர்வில் அதற்கெல்லாம் வழி இல்லை...

தோழர்.ஜெயபாலனுக்கு 
கூடுதல் சோகம் என்னவென்றால்...
சென்ற ஆண்டே அவருக்கு தேக்கநிலை STAGNATION  வந்து விட்டது..
எனவே   நாலுகட்டப்பதவி உயர்வில் ஏற்கனவே பெற்றிருந்த 
ஒரு ஆண்டு உயர்வுத்தொகையும் பறி போய் விட்டது...
எந்த தவறும் செய்யாமல் ஊழியருக்கு 
ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு என்பது 
BSNL நிறுவனம் தவிர வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை...

இத்தகைய கையறு நிலையில் ஊழியர்களை நிறுத்தி விட்டு...
தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வெறியில்...
கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல்..
5 கட்டம் அடைந்தோம்... 50 கட்டம் அடைந்தோம் 
என்று பொய்ப்பிரச்சாரம் செய்து...
BSNLEU  அசிங்கக் கட்டத்தில் நிற்கிறது...

இல்லாத சலுகைகளை இருப்பதாக சொல்லி ஏமாற்றுவது...
அடுத்தவன் சாதனை மீது தனது  லேபிளை ஒட்டுவது...
என்பதெல்லாம் BSNLEUக்கு கை வந்த கலை...
இது  ஊழியர்களுக்குப் புரியாமல் இல்லை..
தெரியாமலும்  இல்லை...

BSNLEUவை நினைக்கையிலே...
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? என்ற 
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் 
நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது...

ஆனாலும் கையறு நிலை காலமெல்லாம் தொடராது...
மே.. 10ல்...
ஏமாந்தோர் விழித்துக் கொள்வர்...
ஏமாற்றுவோர் நடையைக் கட்டுவர்...

ஏமாற்றங்களுக்கு முடிவு பிறக்கும்...
மாற்றங்களுக்கு வழி பிறக்கும்...
இணைந்த கரங்கள் மீண்டும் எழுந்து நிற்கும்...

No comments:

Post a Comment